states

பிரதமர் மோடியின் உபதேசமும் தலைமை நீதிபதியின் பதிலடியும்

புதுதில்லி, ஜூலை 30- எளிமையாக தொழில் செய்வது;  எளிமையாக வாழ்வது போன்று நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டுமென பிரதமர் மோடி பேசியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவகர்கள் முதல் கூட்டத்தில் மோடி  பேசியதாவது:- சிறைகளில் பல விசாரணைக் கைதிகள் சட்ட உதவிக்காகக் காத்தி ருக்கின்றனர். விசாரணைக் கைதி களுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை அந்தந்த மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் ஏற்கலாம். விசாரணைக் கைதிகளின் விசார ணையை விரைவாக முடித்து அவர்  களை விரைவில் விடுவிக்க வேண்டு மென்றார்.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், “மக்கள் தொகையில் ஒரு சிறிய  சதவீதத்தினரே நீதிக்காக நீதிமன் றங்களை அணுகுகின்றனர். பெரும் பான்மையானவர்கள் மௌனமாக இருந்து அவதிப்படுகின்றனர்.

மாவட்ட நீதித்துறையை வலுப் படுத்துவது காலத்தின் அவசியம். பெரும்பாலான மக்கள் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாக மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அதே நேரத்தில் பெரும்பான்மை யான மக்களுக்கு சட்ட விழிப்பு ணர்வு மற்றும் நீதிமன்றங்களை அணுக தேவையான வழிகள் இல்லை. சமூகத்தில் உள்ள ஏற்றத்  தாழ்வுகளை அகற்றும் குறிக்கோளு டன் நவீன இந்தியா கட்டமைக் கப்பட்டு உள்ளது.  “திட்ட ஜனநாயகம்” (Project  democracy) என்பது அனைவரும்  பங்கேற்பதற்கான இடத்தை வழங்குவதாகும். சமூக விடுதலை இல்லாமல் பங்கேற்பு சாத்திய மில்லை. நீதிக்கான அணுகல் சமூக  விடுதலைக்கான ஒரு கருவி” என்றார். தொடர்ந்து பேசிய ரமணா, விசா ரணைக் கைதிகளின் உரிமை களில நீதித்துறையும் வழக்கறி ஞர்களும் தீவிரமாகத் தலையிட வேண்டும். விசாரணைக் கைதிகள்  சார்பாக ‘சிறைக்குச் செல்லும் வழக்கறிஞர்கள்’ உரிய நேரத்தில் அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும். சிறைச் சுவர்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்ப தைப் பற்றி அடிக்கடி அவர்களது குடும்பத்தை சந்தித்துப் பேச வேண்டுமென்றார்.