மற்றொரு நாட்டைப் பாராட்டுவது தேசத்துரோகம் அல்ல!
இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மோர் மாவட் டத்தின் பவோண்டா சாகிப் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலைமான். பழ வணிகம் செய்து வருகிறார். இவர் ஏஐ மூலம் உருவாக் கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தி “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற வார்த்தைகளுடன் முகநூலில் பகிர்ந்ததாக (சேர் - share) கூறப்படுகிறது. பாஜகவைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மே 27 அன்று பிஎன்எஸ் 152 பிரிவின் கீழ் சுலைமான் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது சிர்மோர் மாவட்ட காவல்துறை. காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநில காவல்துறையின் இந்த செயல்பாடு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஜூன் 8 அன்று அவர் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சி யாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தன் மீதான தேசத்துரோக வழக்கை எதிர்த்து இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சுலைமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 19 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் கைந்த்லா அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு,”சுலைமானுக்கு எதிரான புகாரில், இந்தியாவில் உள்ள சட்டத்தால் நிறுவப்பட்ட அரசுக்கு எதிராக வெறுப்போ அல்லது அதி ருப்தியோ ஏற்படுத்தப்பட்டது என்பது நிரூ பிக்கப்படவில்லை. தாய்நாட்டைக் கண்டிக்கா மல் ஒரு நாட்டைப் பாராட்டுவது, தேசத்துரோகக் குற்றத்தை உருவாக்காது. ஏனெனில் இது ஆயுதக் கிளர்ச்சியைத் தூண்டுவதோ, அரசைக் கவிழ்ப்பு நடவடிக்கைகளையோ, அல்லது பிரிவினைவாத செயல்பாடுகளின் உணர்வுகளை ஊக்குவிப்பதோ இல்லை. அதே போல குற்றத்துடன் அவரை இணைக்க போது மான ஆதாரங்களும் இல்லை. அதனால் சுலை மானுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் கைந்த்லா தீர்ப்பு வழங்கினார். தேசத்துரோக வழக்கு மூலம் அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவிற்கு இமாச்சல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.