காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ
பிரதமர் மோடி மணிப்பூரில் வெறும் 3 மணிநேரம் மட்டுமே செலவிட உள்ளார். இவ்வளவு அவசர பயணத்தால் பிரதமர் மோடி என்ன சாதிக்க உள்ளார்? 29 மாதங்களாக பிரதமர் மோடிக்காக காத்திருந்த மக்களுக்கு இது ஒரு அவமானம்.
சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்
பீகாரில் முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் நிரப்பி கொடுக்கும் “படிவம் - 6” கொண்டிருக்கும் தரவுகளின்படி, படிவத்தை நிரப்பிக் கொடுத்தவர்களில் 40% பேர் 25 வயது நிரம்பி யவர்கள். 27% பேர் 20 வயதிற்குட்பட்டவர்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 100 வயதை கடந்த 28 பேர் முதல்முறை வாக்காளர் படிவத்தை நிரப்பியிருக்கிறார்கள். பீகாரில் நடக்கும் லட்சணம் இதுதான்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில மின்சாரத் துறையின் கொள்ளை மற்றும் துன்புறுத்தலால் மனமுடைந்த ஒரு இளைஞர் லக்னோவில் உள்ள முதலமைச்சர் இல்லம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல. பாஜக அரசாங்கத்தின் கொலை ஆகும்.
மூத்த எழுத்தாளர் சஞ்சய் ஜா
பிரேசிலின் வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சானரோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றுள்ளார். ஜனநாயகமும் அரசியலமைப்பும் தான் ஒரு நாட்டை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருக்கிறது. இதற்கு பிரேசில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே சாட்சி.
