states

img

மக்கள் நீதிமன்றத்தால்  2 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு

மக்கள் நீதிமன்றத்தால்  2 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு

நாடு முழுவதும் நடைபெற்ற மக்  கள் நீதிமன்றத்தில் சுமார்  2.4 கோடிக்கும் அதிகமான  வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச  முறையிலும் தீர்வு காணும் நோக்கத் தின் அடிப்படையில் தேசிய சட்டப் பணி கள் ஆணையம் சார்பில் நாடு முழு வதும் ஆண்டுக்கு நான்கு முறை தேசிய  மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதா லத்) நடத்தப்பட்டு வருகின்றன.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி 2025  ஆம் ஆண்டின் 3 ஆவது தேசிய மக்கள்  நீதிமன்றம் செப்.13 அன்று நடை பெற்றது. இதன் படி நாடு முழுவதும் தாலுகா, மாவட்ட, உயர் நீதிமன்றங்களில் மக்கள்  நீதிமன்றம் நடைபெற்றது. அதில்  வாகன  விபத்து வழக்குகள், காசோலை மோசடி,  வங்கிக் கடன், குடும்பத் தகராறுகள் (விவாகரத்து தவிர), தொழிலாளர் நலன்,  நிலம் கையகப்படுத்துதல், நுகர்வோர் குறைதீர், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண பாக்கி உள்ளிட்ட பல்வேறு வகை யான 2 கோடியே 42 லட்சத்துக்கும் அதிக மான வழக்குகளுக்கு தீர்வு காணப்  பட்டு வரலாற்று சாதனை படைக்கப்  பட்டுள்ளது. இந்த வழக்குகளின் மூலம்  சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே  ரூ.7,817 கோடிக்கும் அதிகமான  தொகைக்கு சமரசம் எட்டப்பட்டுள்ள தாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் நீதிமன்றங்களின் சுமை குறைந் துள்ளதாக கூறப்படுகிறது.