இந்திய வான் பரப்பில் பாக்., விமானங்கள் பறக்க தடை நீட்டிப்பு
இந்திய வான்வெளியில் பாகிஸ் தான் விமானங்கள் பறப்ப தற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர வாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகி ஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த மற்றும் வாடகை விமானங்கள் என அனைத்தும் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. முதலில், மே 24 வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை, ஜூன் 24 வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் ஜூலை 24 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.