states

img

துப்பாக்கிகளை வாங்கிக் குவித்த பீகார் அமைச்சர்கள்!

பாட்னா, ஜன.4- பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை, ஒவ் வொரு ஆண்டும் டிசம்பர் 31 அன்று வெளியிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தர விட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அங்கு பின்பற்றப் பட்டு வருகிறது. அதன்படி பீகார் அமைச்சர்களின் புதுப்பிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் இரண்டு நாட்க ளுக்கு முன்பு வெளியாகியுள்ளன. இதில், 31 அமைச்சர்கள் அறிவித்த அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்கள் பட்டியலில் 16 அமைச் சர்கள் நவீன ரக துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகளை வைத்திருக்கும் விஷ யம் தெரியவந்துள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஜனக் ராமிடம் (பாஜக) ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் விலை யுள்ள 30.06 ரக துப்பாக்கியும், ரூ. 4 லட்சத்து 5 ஆயிரம் விலை மதிப்புள்ள 32 ரக கைத்துப்பாக்கியும் உள்ளது.

அதேபோல் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரியிடம் (பாஜக) ரூ. 4 லட்சம் மதிப்புள்ள துப் பாக்கி உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் அரசில் இடம் பெற்றுள்ள மூன்று பெண் அமைச்சர்களில் இருவர் ஆயுதம் வைத் துள்ளனர். துணை முதல்வர் ரேணு தேவியிடம் (பாஜக) கைத்துப்பாக்கி உள்ளது. அதேபோல தன்னிடம் துப் பாக்கி மற்றும் இரட்டை குழல் துப் பாக்கி இருப்பதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் லேசி சிங் (ஐக்கிய ஜனதா தளம்) தெரிவித்துள்ளார்.

மேலும் ஜமா கான் (ஐக்கிய ஜனதா தளம்), பிரமோத் குமார் (பாஜக), ஷ்ரவன் குமார் (ஐக்கிய ஜனதாதளம்), ராம்சுரத் ராய் (பாஜக), சந்தோஷ் சுமன் (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா), மங்கள் பாண்டே (பாஜக), அசோக் சவுத்ரி (ஐக்கிய ஜனதாதளம்), சுமித் குமார் சிங் (சுயேச்சை), சுபாஷ் சிங் (பாஜக), சுனில் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயந்த் ராஜ் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் நாராயண் பிரசாத் (பாஜக) ஆகிய அமைச்சர்களும் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்துள் ளனர். ஒட்டுமொத்தமாக நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருக்கும் 16 அமைச்சர்களில் 8 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். 5 பேர் ஜக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஒருவரும், சுயேச்சை ஒருவரும் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். துப்பாக்கிகள் வைத்திருக்கும் கேபினட் அந்துஸ்துள்ள இந்த அமைச்சர்களுக்கு பீகார் அரசு சார்பிலும் தனியாக பாதுகாப்பு வழங் கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.