நல ஓய்வூதியமாக 62 லட்சம் பேருக்கு தலா ரூ.3,200 ஓணம் பரிசு : கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம் கேரளத்தில் சனிக்கிழ மை முதல் சுமார் 62 லட்சம் பேருக்கு இரண்டு தவணை நல ஓய்வூதிய மாக ரூ.3,200 ஓணம் பரிசாக வழங் கப்படும் என கேரள அரசு அறி வித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”நல ஓய்வூதியமாக 62 லட்சம் பேருக்கு தலா ரூ.3,200 அறிவிக்கப்பட்டு ள்ளது. இது சமூக பாதுகாப்பு மற்றும் நல நிதி ஓய்வூதியத் தொகை ஆகும். நல வாரிய ஓய்வூதிய பயனாளிகளு க்கு இது அரசின் ஓணம் பரிசு. ஆகஸ்ட் மாத ஓய்வூதியத்துடன் கூடு தலாக, ஒரு தவணை நிலுவைத் தொ கையை செலுத்த ரூ.1679 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 26.62 லட்சம் பேருக்கு வங்கிக் கணக் குகள் மூலம் மாற்றப்படும். மீதமுள்ள தொகை கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். கேரளத்தில் 8.46 லட்சம் பேருக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் ஒரு சிறிய பகுதி ஒன்றிய அரசின் பங் காகும். இதற்காக மாநில அரசு ரூ.48.42 கோடியை முன்கூட்டியே அனுமதித்துள்ளது. ஜூலை மாத ஓய்வூதியமான ரூ.1600 கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் விநியோ கிக்கப்பட்டது” என அவர் கூறினார். பெவ்கோ ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் போனஸ் பெவ்கோ என்னும் பானங்கள் கழக ஊழியர்களுக்கு இந்த முறை ஓணம் போனஸாக ரூ.1 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். நிரந்தர ஊழியர்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.1,02,500 கருணைத் தொகை மற்றும் செயல் திறன் ஊக்கத்தொகை கிடைக்கும். கடந்தாண்டு இது ரூ.95,000 ஆக இருந்தது. அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தலைமையிலான பெவ்கோ தொ ழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எடுக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.