states

img

வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை

வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை

வீடுதோறும் அத்தப்பூ கோலம்; புத்தாடைகளுடன் கமகமக்கும் விருந்து

கேரள மாநிலத்தில் கொண்  டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தப் பண்  டிகை முன் காலத்தில் ‘‘அறு வடைத் திருநாள்’’ என்ற பெயரில்  கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக  வரலாற்றுக் குறிப்புகளும், இலக்கி யங்களும் தெரிவிக்கின்றன. பருவ  மழைக்காலம் முடிந்து எங்கும் பசு மையும் செழுமையும் நிறைந்து காணப்படும் “சிங்கம்” மாதத்தை கேரள மக்கள் “அறுவடைத் திரு நாள்” என்றும் போற்றி வழிபட்டு சிறப்பித்திருக்கின்றனர். அதே போல கேரள மன்னன் மகாபலி  சக்கரவர்த்தியின் நினைவாக இப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும், இந்த நாளில் தங்கள் வீடு  தேடி வரும் மகாபலி அரசனை வர வேற்கும் விதமாக விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலம் இடு வதை வழக்கமாக வைத்து இருக்கி றார்கள் கேரள பெண்கள். இந்நிலையில், கேரளாவில் மத  பாகுபாடின்றி அனைத்து மக்களா லும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான திருவோணம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. வீடு தோறும் அத்தப்பூ கோலம், புத்தா டைகளுடன் கமகமக்கும் விருந்து என கேரளம் களைகட்டியது. மேலும் ஊஞ்சல், வடம் பிடித்து இழுத்தல், உறியடி, பந்து விளை யாட்டுகளுடன் கேரள மாநிலம் விழாக் கோலம் பூண்டது. மேலும்  கோவில்களில் சிறப்பு வழிபாடு கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில்.. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இதனால் ஓணம் விழா குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று  குமரி மாவட்டத்தில் ஓணம் விழா  வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டது. அதே போல தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட  கேரள எல்லையில் உள்ள தமிழ்  நாடு பகுதிகளிலும் ஓணம் பண் டிகை சிறப்பு விருந்துகளுடன் களைகட்டியது. தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு கிராம பஞ்சா யத்து அலுவலகத்தில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது. மூணாறு கிராம பஞ்சாயத்து தலைவர் மற் றும் உறுப்பினர்கள் அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற இந்த ஓணம் கொண்டா ட்டத்தில் அலுவலக வளாகம் முன்பு  பூக்களால் அத்தப்பூக் கோலம் இடப்பட்டு கிராம பஞ்சாயத்து அலு வலகம் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு வேடிக்கையான விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்பட் டன. மேலும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் அறுசுவை விருந்து உபசரிப்பு நடைபெற்றது.