states

பாஜக ஆட்சியில் வீழ்ந்த இஸ்லாமிய எம்.பி.,க்களின் எண்ணிக்கை

இந்திய மக்கள் தொகையில் இஸ்லா மியர்கள் 1951ல் 10 சதவீதமாக வும் 2011 ஆம் ஆண்டில் 14 சதவீதமா கவும் இருந்தனர். இது 2020ல் 15 சதவீதமாக உயர்ந்து இருக்கும் என்று  ஆய்வுகள் காட்டுகின்றன.ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை  10 சத வீதத்தை தாண்டியது இல்லை. குறிப்பாக பாஜக ஆட்சியில் அது மேலும் குறைந்துள்ளது. 1980களில் 8.3 சதவீதமாக இருந்த இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து,1990 களில்  4.8 சதவீதமாக குறைந்தது. அதை தொடர்ந்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி2  (யுபிஏ-2), மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிகளில் இந்த எண்ணிக்கை 5 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் குறைந்துள்ளது. 1990 களில் துவங்கிய இந்த சரிவு, 100  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் பெற்ற பாஜகவின் வளர்ச்சி யுடன் ஒத்துப் போகிறது.  2004-2009 ஆண்டில் இடது சாரிகள் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1  (யுபி ஏ-1)ல் 7 சதவீதம் வரை அதிகரித்தது.  அதாவது பாஜக எம்.பி க்களின் எண்ணிக்கை சரிந்த போது இஸ்லா மிய நாடாளுமன்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ள தைக் காண முடிகிறது.

1984ல் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் இணைந்ததில் இருந்து இஸ்லாமியர்களை புறக்கணித்து வந்துள்ளது. கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல் வெளிப்பாடாக, அக்கட்சியின் உறுப்பினர்களில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.மேலும் காங்கிரசிலும் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 1977 முதல் 1989 வரை நடைபெற்ற  நாடாளுமன்ற  தேர்தல்களில் மட்டுமே 7.5 சதவீதம் வரை இஸ்லாமியர்களை நாடாளு மன்ற உறுப்பினர்களாக காங்கிரஸ் கொண்டிருந்தது. தற்போது  1.1 சதவீதம் மட்டுமே இஸ்லாமிய எம்.பி க்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் விட்ட வெற்றிடத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ் வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிரப்பியுள்ளன. இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் சமாஜ்வாதி 60 சதவீதமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 சத வீதமும்,  அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 22.7 சதவீதம் என இஸ்லாமி யர்களை நாடாளுமன்ற உறுப்பினர்க ளாக கொண்டுள்ளன.  யூனியன் பிரதேசங்களை விட்டு விட்டு மாநிலங்களை மட்டும் கணக்கிட்டு பார்த்தால் 10-15 சதவீதம் இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள கர்நாடகா, மகாராஷ்டி ரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை போதுமான விகிதத்தில் இஸ்லாமியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதில் சரிவை சந்தித்து உள்ளன. குறிப்பாக இந்த வரிசையில் மகாராஷ்டிராவை தவிர வேறு மாநிலங்களிலும் தற்போது இஸ்லாத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. அதிர்ச்சிகரமான தகவல் என்ன வெனில் மக்கள் தொகையில் இஸ்லா மியர்களை 14 சதவீதம்  கொண்டுள்ள உத்தர்கண்ட், 8 சதவீதம்  கொண் டுள்ள கோவா மற்றும் மணிப்பூர் மாநி லங்களில் ஒருமுறை கூட இஸ்லாமி ர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்க ளாகவில்லை.  15 சதவீதம் முஸ்லீம்களைக் கொண்டுள்ள கேரளா, மேற்கு வங்கம், அசாம், ஜம்மு - காஷ்மீர் மற்றும்  பீகார் ஆகிய மாநிலங்கள் எல்லா தேர்தல்களிலும் குறிப்பிட்ட சதவீத முஸ் லிம்களை நாடாளுமன்ற உறுப்பி னர்களாக கொண்டுள்ளன.

தி இந்து (ஆங்கிலம்) ஜூலை 6 இதழில் அனுஷ்கா கட்டாருகா, விக்னேஷ் ராதா கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய  குறிப்பின் தமிழ் சுருக்கம்: சேது சிவன்