states

img

கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிப்பு

கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை  4 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிப்பு

மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து (2014ஆம் ஆண்டு முதல்) நாட் டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4  ஆண்டுகளில் நாட்டில் கோடீஸ் வரக் குடும்பங்களின் எண்ணிக் கை 2 மடங்காக அதிகரித்துள் ளது என “மெர்சிடெஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா வெல்த் ரிப் போர்ட் 2025 ( Mercedes-Benz Hurun India Wealth Report 2025)” ஆய்வறிக்கையில் கூறப் பட்டுள்ளது.  இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,“இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் கோடீஸ்வரக் குடும் பங்களின் (ஒரு குடும்பம் ரூ.8 கோடியே 50 லட்சத்துக்கு மேற் பட்ட சொத்துகள் கொண்டவை) எண்ணிக்கை 4,58,000 ஆக இருந்தது. ஆனால் 2025ஆம் ஆண்டில் நாட்டின் கோடீஸ்வ ரக் குடும்பங்களின் எண்ணிக்கை வியத்தகு முறையில் விரி வடைந்து 8,71,700 ஆக உயர்ந் துள்ளது. இது இரண்டு மடங்கு அதிகரிப்பு ஆகும்.  கோடீஸ்வரக் குடும்பங்க ளின் எண்ணிக்கையில் (1,78,600) மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அம்மாநில தலைநகரான மும்பை நகரம் கோடீஸ்வரக் குடும்பங்களின் தலைநகரமாக விளங்குகிறது. இரண்டாவது இடத்தில் தில்லி உள்ளது. அங்கு 79,800 கோடீஸ்வரக் குடும்பங்களும், மூன்றாவது இடத்தில் இருக் கும் தமிழ்நாட்டில் 72,600 குடும் பங்களும் வாழ்கின்றன. 68,800 கோடீஸ்வரக் குடும்பங்க ளுடனும் கர்நாடகா 4ஆவது இடத்திலும், 68,300 கோடீஸ்வரக் குடும்பங்களுடன் குஜராத் 5ஆவது இடத்திலும் உள்ளது. உத்தரப்பிரதேசம், தெலுங்கா னா, மேற்கு வங்கம், ராஜஸ் தான், ஹரியானா உள்ளிட்ட மாநி லங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. நாட்டில் 79 சதவீதத்துக்கும் மேற்பட்ட கோடீஸ்வரக் குடும் பங்கள் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களில் வாழ்கி றார்கள்” என அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கா ஆட்சி செய்கிறது மோடி அரசு?

நான் ஏழைத்தாய் மகன், எனது ஆட்சி ஏழை மக்களுக்கானது என பிரதமர் மோடி பொது மேடை களில் அடிக்கடி கூறுவார். ஆனால் மோடி ஆட்சி பணக்காரர்களுக்கானது என மெர்சிடெஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா ரிப்போர்ட் அறிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. அதன்படி, 2014ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இவ்வாறு பெரும் செல்வந்தர்களைக் கொண்ட நாடாக இருந்திருக்கவில்லை. ஆனால் ஏழை மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீண்டனர். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, ஏழை மக்களின் நிலைமை மிக மோசமாகிக் கொண்டே உள்ளது. இதற்கிடையே 2017ஆம் ஆண்டு திடீரென நாட்டின் கோடீஸ்வரக் குடும்பங்களின் எண்ணிக்கை  1.59 லட்சமாக (15,99,900) உயர்ந்தது. அடுத்த 4 ஆண்டில் (2021) 4.58 லட்சமாகவும், தற்போது 2025ஆம் ஆண்டில் 90% வளர்ச்சியுடன் 8.71 லட்சம் கோடீஸ்வரக் குடும்பங்களாகவும் அதி கரித்துள்ளது. இதன்மூலம் பணக்காரர்களுக்காகவே மோடி அரசு ஆட்சி செய்கிறதா? சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.