புதுதில்லி, ஜன.7- இந்தியாவின் சேவைத்துறை வர்த்தக நடவடிக்கை குறியீட் டெண் நவம்பர் மாதத்தில் 58.1 புள்ளியாக இருந்தது. இது டிசம் பர் மாதத்தில் 55.5 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டிலும் சேவைத் துறை கடும் பாதிப்பை சந்தித்தது. நுகர்வோர் மேலாண் குறியீட் டெண் (Purchasing Managers Index - PMI) 50 புள்ளிகளுக்கும் கீழ் இருந்தது. எனினும் 2021 நவம் பரில் 58.1 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்த நுகர்வோர் மேலாண் குறியீட்டெண், தற்போது 55.5 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் மூன் றாம் காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சராசரி வளர்ச்சி விகிதம் ஸ்திரமாக இருந்தாலும் கூட, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக உள்நாட்டில் சேவைத்துறை சார்ந்த நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுப் பய ணிகள் வரத்து குறையலாம். இத னால் சுற்றுலா சார்ந்த சேவைத் துறை நடவடிக்கைகள் கடுமை யாக பாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 2021 டிசம்பரில் சேவைத்துறையில் புதியவேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஒமைக்ரான், கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ லில் நிறுவனங்கள், தற்போது இருக்கும் பணியாளர்களைக் கொண்டே நிலைமையை சமா ளிப்பதற்கு முயலும் என்பதால், புதிய வேலை வாய்ப்புக்கான சூழல் குறையவே வாய்ப்பு உள் ளது என்று தொழிற்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.