states

img

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது : கொலையானவரின் சகோதரர் பிடிவாதம்

நிமிஷா பிரியாவை மன்னிக்க முடியாது : கொலையானவரின் சகோதரர் பிடிவாதம்

சனா ஏமன் சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளத்தைச்  சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரி யாவின் விடுதலைக்கு மற்றொரு சவாலான விஷயமாக கொலை செய்யப்பட்ட தலாலின் குடும்பத்தி னரிடமிருந்து எழுந்துள்ளது. நிமிஷா  பிரியாவை மன்னிக்க முடியாது என தலாலின் சகோதரர் அப்தெல்பெட்டா மெஹ்தி பிபிசிக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்தார். அதில், சமரச முயற்சிகளில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். கடவுளின் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைவிடக் குறைவாக எதுவும் செய்தற்கு இல்லை. தலாலின் கொடூ ரமான கொலை யால் மட்டுமல்ல, நீண்ட சட்ட நடவடிக் கைகளாலும் குடும்பம் நிறைய பாதிக்கப்பட்டது. குற்றத்தை நியா யப்படுத்தி,குற்றவாளியை பாதிக்கப்பட்டவராக சித்தரிக் கும் இந்திய ஊடக அறிக்கைகள் பெரும் துன்பத்தை ஏற்படுத்து கின்றன. காரணம் எவ்வளவு கடுமை யானதாக இருந்தாலும், எந்தக் கொலையையும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று சகோ தரர் பிபிசி அரபியிடம் கூறினார்.  நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு சற்று முன்பு தலால் குடும்பத்தினரின் இந்த நிலைப்பாடு வெளியாகி உள்ளது. தலால் குடும்பத்தின் இந்த நிலைப் பாடு சமரச முயற்சியில் ஈடுபட்டோ ருக்கும், நிமிஷா பிரியா குடும்பத்தின ருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள் ளது. ஜுலை 16இல் மரண தண் டனை என்கிற தீர்ப்பு குறித்த பதற்றம் தொடர்கிறது.