states

img

இந்தியப் பிரிவினையை வைத்து வெறுப்பை விதைக்கும் என்சிஇஆர்டி

இந்தியப் பிரிவினையை வைத்து  வெறுப்பை விதைக்கும் என்சிஇஆர்டி

இந்திய பிரிவினையை வைத்து மாணவர்களின் மனதில் மத வெறுப்பை விதைக்கும் வகையில் புதிய புத்தகத் தொகுப்புகளை என்சிஇ ஆர்டி வெளியிட்டுள்ளது.  மாணவர்களின் பேச்சுப் போட்டி உள்ளிட்ட திறன்களை அதிகரிப்ப தாகக் கூறி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NC ERT) வெளியிட்டுள்ள புதிய சிறப் புத் தொகுப்பானது மாணவர்களி டம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இந்தியப் பிரிவினைக்கு மூன்று முக்கிய நபர்களே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.  முகமது அலி ஜின்னா, காங்கி ரஸ் தலைமை, அப்போதைய வைசி ராய் லார்டு மவுண்ட்பேட்டன் ஆகி யோரே பிரிவினைக்கு காரணம் என அப்புத்தக தொகுப்பு குறை கூறியுள்ளது.  மோடி அரசு ஆகஸ்ட் 14 –ஐ இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை யை நினைவு கூரும் நாளாக அறி வித்துள்ளது. மேலும் இந்த தினத்திற்காக உருவாக்கப்பட்ட இத்தொகுப்பானது “நாட்டைப் பிரிக்க வேண்டுமென கேட்டது ஜின்னா, அதனை ஏற்றுக்கொண் டது காங்கிரஸ், அதை நடை முறைப்படுத்தியவர் மவுண்ட் பேட்டன் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஜின்னாவுக்கு முதலில் மத அடிப்படையிலான பிரிவினை கோரிக்கையை முன்வைத்தது பாஜகவின் முன்னோடிகளான இந்துமகா சபா, ஆர்எஸ்எஸ் இன் தலைவர்களே என்பதை அப்பட்ட மாக மறைத்துவிட்டது.  குழந்தைகளிடம் திணிக்கப்படும் வெறுப்பு  பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பா னது பல ஆண்டுகளாக, குழந்தை  பருவத்தில் இருந்தே இந்தியர் கள் மனதில் திட்டமிட்டு மத வெறுப்பையும் பிரிவினை வாதத்தையும் பரப்பி வருகிறது. இதற்காக கல்வித் துறையை மிகத் தீவிரமாக பயன்படுத்தி வரு கிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரி வினைக்கு காரணம் இஸ்லாமி யர்களும் காங்கிரசும் தான் என பல ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பாஜக திட்டமிட்டு பரப்பி வரு கிறது.  இந்நிலையில் இதே மதவெறி பிரிவினைவாதக் கருத்துக்களை திட்டமிட்டு மாணவர்களின் மனதில் திணிப்பதற்காக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் தொகுப்பை தயாரித்துள்ளது. அத்தொகுப்பில் உள்ள ‘பிரி வினைக்குக் காரணமானவர்கள்’ என்ற தலைப்பின் கீழ் இது தொ டர்பான விவரங்கள் இடம்பெற்றுள் ளது. இந்த தலைப்பின் கீழ் 1947 ஜூலை மாதம் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையும் இணைக்கப் பட்டுள்ளது.  இது என்ன தொகுப்புகள்? இந்த தொகுப்புகள் வழக்க மான பாடப்புத்தகங்களின் பகுதி யல்ல. பள்ளிகளில் விவாதங்கள், பட்டிமன்றங்கள்  போன்ற போட்டி களில் மாணவர்கள் பயன்படுத்தி பேசுவதற்காக என்று இவை ஆங்கி லம் மற்றும் இந்தியில் வெளி யிடப்பட்டுள்ளன.   6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 முதல் 12 ஆம் வகுப்பு என இரண்டு தனித் தனி தொகுப்புகளாக வெளி யிட்டுள்ளது. இந்த இரண்டு தொ குப்புகளிளுமே ஆகஸ்ட் 14 “பிரி வினையின் தினமாக அனுசரிக் கப்படும்”  என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த அறிவிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  இது பிரிவினைக்கான உண்மை யான அரசியல் காரணிகளையும் சூழலையும்  மறைத்துவிட்டு இஸ் லாமியர்களை மிகக் கொடூரமா னவர்களாகவும்  பிரிவினைவாதி களாகவும் திட்டமிட்டு சித்தரிப்ப துடன், ஆர்எஸ்எஸ் இன் அரசியல் திட்டமாக உள்ள அகண்ட பாரத திட்டத்தை நியாயப்படுத்துவதன் வெளிப்பாடு என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.  சுதந்திரத்திற்காக போராடியவர்களை வில்லன்களாக சித்தரிக்கும் திட்டம்  தற்போதைய தொகுப்பில் பேசப்பட்டுள்ள கருத்துக்களானது முழுக்க முழுக்க சுதந்திரத்திற்காக போராடியவர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய பிரிவினையானது “தவிர்க்க முடியாததல்ல” அது தவறான எண்ணங்களின் (கெட்ட நோக்கத்தின்) காரணமாக ஏற்பட்ட விளைவு  என்றும் கூறுகிறது. அது மட்டுமின்றி உள்நாட்டுப் போர் குறித்த பயத்தின் காரணமா கத்தான் நேருவும் படேலும் பிரி வினையை ஏற்றுக்கொண்டனர், காந்தியும் தனது எதிர்ப்பைக் கை விட்டார் என்றும் எழுதப்பட்டுள் ளது.  9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்க ளுக்கான தொகுப்பானது முஸ்லிம் தலைவர்களின் சுய அடை யாள உணர்வில் இருந்து தான்  பிரிவினை தொடங்கியது என இஸ்லாமிய வெறுப்பை உமிழும் வகையில் எழுதப்பட்டுள்ளது.   அதுமட்டுமின்றி இந்திய பிரி வினையின் போது ஏற்பட்ட ஒட்டு மொத்த கலவரத்தையும்  பின்னால் இருந்து இயக்கிய இந்துமகா சபா, ஆர்எஸ்எஸ்-இன் மதவெறு ப்பு அரசியலை மறைத்து விட்டு வெறுமனே இப்பிரிவினை இந்தி யாவின் ஒற்றுமையை சிதைத்தது, பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பொருளாதாரங்களை அழித்தது, படுகொலைகளுக்கும் இடம் பெயர்வுக்கும் வழிவகுத்தது, சமூக நல்லிணக்கத்தைக் குலைத் தது,  ஜம்மு-காஷ்மீரைத் தொடர் ச்சியான கலவரங்களுக்குள் தள்ளி யது, அதன் காரணமாகத் தான் அங்கு பயங்கரவாதம் அதிகரித்தது என ஒட்டுமொத்த வரலாற்றையும் திரித்து மாற்றி பாஜகவின் முன்னோடிகளின் தவறுகளை மறைத்திடும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது.