states

img

இந்தியா, பிரேசில், சீனாவுக்கு நேட்டோ பொதுச் செயலாளர் மிரட்டல்

இந்தியா, பிரேசில், சீனாவுக்கு நேட்டோ பொதுச் செயலாளர் மிரட்டல்

பிரசல்ஸ்,ஜூலை 16- இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செய லாளர் மார்க் ரூட்டே மிரட்டல் விடுத்துள் ளார். உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தை முடக்கும் வேலைகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு வருகின்றனர். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500 சதவீதம் வரிகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத் திருந்தார். இந்த வரி மிரட்டல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றிருந்த போது கவலை தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்த பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச்  செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா,  இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் போர் நிறுத்தத் துக்கான சமாதானப் பேச்சுவார்த்தை களை புடினிடம் வேகமாக முன்னெடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் மூன்று நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வழியாக புடினுக்கு போர் நிறுத்தத்தை வேகமாக முன்னெடுக்கச் சொல்லி பேசுங்கள் என்றும் மிரட்டியுள்ளார்.  அதே போல பேச்சுவார்த்தையை வேகமாக முன்னெடுக்காத நிலையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், இந்தியா, பிரேசில், சீனாவை கடுமையாகப் பாதிக்கும் வகையில் அந்த நாடுகளின் மீது  100 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும் மிகப்பெரிய அளவில் பல பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.  இரு நாட்களுக்கு முன் டிரம்ப் 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் திட்டம் உள்ளது என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில் நேட்டோ பொதுச்செயலாளரும் தற்போது மிரட்டல் விடுத்துள்ளார்.  ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இது குறித்து பேசிய போது, “டொனால்டு டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. அது எந்த பலனையும் தராது.” என எச்சரித்துள்ளார்.