states

img

கொல்லத்தின் மனம் கவர்ந்த முகேஷ்

கேரளத்தின் கொல்லம் மக்களவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளராக திரைக்கலைஞர் எம்.முகேஷ் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்  னணி வேட்பாளராக என்.கே. பிரேமசந்திரன் போட்டியிடு கிறார். என்டிஏ கூட்டணியில் ஜி. கிருஷ்ணகுமார் போட்டியிடு கிறார். இவரும் திரைக்கலை ஞராவார். சட்டமன்ற உறுப்பினராக கொல்லத்தில் 1748 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை பட்டியலிட்டு முகேஷ் வாக்கு சேகரித்து வருகிறார். பத்து ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து  என்.கே.பிரேமசந்திரன் செயல்படுத்திய வளர்ச்சியை காட்ட முடியுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கொல்லம் தொகுதியில் 12 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர்.