states

img

நிறைவு பெற்றது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நிறைவு பெற்றது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாட்கள் அவை நடைபெ றும் என அறிவிக்கப்பட்ட இந்த கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு பின்னர் சுதந்திர தின கொண்டாட் டங்களை முன்னிட்டு 5 நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டது. அதன்பின்பு 18ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற அவைகள் தொடங்கின. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே ஆபரேசன் சிந்தூர் குறித்தும், பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகி யவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தன. “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் தொடர் கிளர்ச்சியால் மிரண்ட மோடி அரசு ஆபரேசன் சிந்தூர் பற்றி விவாதம் நடத்தியது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விவாதிக்க கோரி அஞ்சிய மோடி அரசு நாடாளுமன்றத்தை தொடர்ச்சியாக முடக்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியா ழக்கிழமை உடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்கள வையில் 12 மசோதாக்களும், மாநிலங்க ளவையில் 15 மசோதாக்களும் நிறை வேற்றப்பட்டன. வியாழனன்று மதியம் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையும் வியாழனன்று மாலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரின்போது, கோவா மாநில சட்டமன்றத் தொகுதி களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியின ரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா, வணிகக் கப்பல் மசோதா, மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, மணிப்பூர் ஒதுக்கீட்டு (எண்.2) மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா, வருமான வரி மசோதா, வரிவிதிப்பு சட்டங்கள் (திருத் தம்) மசோதா, இந்திய துறைமுக மசோ தா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா ஆகிய மசோ தாக்கள் மக்களவையில் நிறைவேற்றப் பட்டன. அதே சமயம் மாநிலங்களவையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் எந்த இடையூறும் இல்லாமல் சரக்கு ஏற்றும் மசோதா(The Bills of Lading Bill) 2025-ஐ தவிர, மற்ற மசோதாக்கள் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சிறிது விவாதத்திற்குப் பிறகு அல்லது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்னரே நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னர் நடைபெற்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படாமல் இருந்த மசோதாக்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.