states

தலைமை நீதிபதி வெளியேற்றம்!

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் சட்டத்தை திருத்துகிறது மோடி அரசு

இஸ்ரேலில் அதிதீவிர வலதுசாரி அரசு நீதித்துறையை தனக்கு அடிமையாக மாற்ற முயற்சி மேற்கொள்வதை, மோடி அரசு அப்படியே இந்தியாவில் செய்ய முயற்சிக்கிறது. சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களை நடத்த ஒரு பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணையிடுகிறது. ஆனால் மோடி அரசு  அதை அழித்தொழிக்க முயற்சிக்கிறது. 

 சீத்தாராம் யெச்சூரி
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர்

புதுதில்லி, ஆக. 10 - தேர்தல் ஆணையர்கள் நிய மனம் தொடர்பாக, “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்த னைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா -2023” மசோதாவை நாடா ளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ள மோடி அரசு, தேர்தல் ஆணையர்களை பரிந்து ரைக்கும் குழுவிலிருந்து, உச்ச  நீதிமன்றத் தலைமை நீதிபதி யையே நீக்கும் அராஜகத்தில் இறங்கியுள்ளது. கே.எம். ஜோசப் தலைமை யிலான 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச  நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இதுதொடர்பாக தெளி வான தீர்ப்பை வழங்கியிருந்த நிலையில், அந்த தீர்ப்பை அவமதிக் கும் வகையிலும், அப்பட்டமான முறையில் மீறியும், தங்களின் கைப் பாவைகளை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களை நியமித்துக் கொள்வதற்கு தோதாகவும் இந்த புதிய மசோதாவை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை நியமிப்பதற்கு இருப்பது போல, தேர்தல் ஆணை யர்களை நியமிப்பதற்கும் ‘கொலீ ஜியம்’ போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொட ரப்பட்ட நிலையில், அதன்மீது கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விரிவான விவாதத்தை நடத்தியது.  அதன் முடிவில், நாடாளு மன்றத்தால் இயற்றப்படும் சட்டத் திற்கு உட்பட்டு, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவே, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர் தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும்; அவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார் என  உச்ச நீதிமன்றம் கடந்த 2023 மார்ச்  2 அன்று தீர்ப்பளித்தது. “தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்று சட்ட ஆணை யம் மற்றும் பல்வேறு குழுக் களின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அர சியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது நாட்டிற்கு முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் எழுந்து, அது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்கா மல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நட வடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல்  ஆணையர் ‘‘தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது” என்பதன் அடிப் படையில் தேர்தல் ஆணையர் களை நியமிக்க சுதந்திரமான அமைப்பு வேண்டும்” என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பை, கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு வழங்கியிருந்தது.

“இன்றைய இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல் படுவதாக ஒன்றிய அரசு வாய்மொ ழியாக மட்டுமே கூறி வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 18 ஆண்டுகளில் 14  தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட 6 ஆண்டு முழுப் பதவிக்கால மும் இருந்ததில்லை. இது ஜன நாயக நாட்டிற்கு நல்லதல்ல” என்று  நீதிபதி கே.எம். ஜோசப் கூறினார்.

“ஒன்றிய அரசு 6 ஆண்டு பதவிக் காலத்தை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர் களாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 1991-இன் பிரிவு 6-ஐ மீறுவதாகும். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக நாடாளுமன்றம் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசிய லமைப்பு நிர்ணய அவை விரும்பி யது. ஆனால், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 72 ஆண்டுகள் ஆனபோதிலும், அதுதொடர்பாக எந்தவொரு தனிச்சட்டமும் இல்லை. நாட்டைப் பொறுத்தவரை இது கவலைக்குரிய போக்குதான். இதைக் கட்டுப்படுத்த இந்திய  அரசியல் சட்டத்தில் வழியில்லை. அரசியல் சட்டத்தின் இந்த மவு னம் நேர்மையற்ற முறையில் சுயநலமாகப் பயன்படுத்தப்படு கிறது” என்று கூறிய நீதிபதி கே.எம்.  ஜோசப், “பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலை மை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட் பட்டு, தலைமை தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர் களைத் தேர்வு செய்யும்” என கடந்த 2023 மார்ச் 2 அன்று தீர்ப்பளித்தார். இந்நிலையில்தான், தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர் பாக, “தலைமைத் தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023” (Chief Election Commissioner and other Election Commissi oners (Appointment Conditions of Service and Term of Office) Bill, 2023) என்ற பெயரில் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மோடி அரசு தற்போது முடிவு செய்துள்ளது.  ஆனால், வழக்கம்போல இதி லும் தனது குறுக்குப் புத்தியை அது காட்டியுள்ளது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பின்படிதான் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றா லும், குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியையே வெளி யேற்றும் விதமாக சட்டத் திருத்த மசோதாவை வடிவமைத்துள்ளது.

அதாவது, “இந்த தேர்வுக் குழு வில் தலைமை நீதிபதியோ அல்லது வேறு நீதிபதியோ யாரும் இடம்பெற மாட்டார்கள். மாறாக, (1.) ​​பிரதமர்- தேர்வுக்குழு தலை வர்; (2.) எதிர்க்கட்சித் தலைவர் -  தேர்வுகுழு உறுப்பினர்; (3.) பிரத மர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமை ச்சர் - தேர்வுக்குழு உறுப்பினர் ஆகி யோர் இடம்பெறுவார்கள். இவர்கள் அடங்கிய குழுதான் இனி  தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்களை தேர்வு செய்யும். அவர் களின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்பார்” என்று கூறி யுள்ளது. இந்த மசோதாவை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக் வால் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த மசோதாவின் படி, முதலில் அமைச்சரவைச் செயலாளரின் தலைமையில் ஒரு தேடல் குழு  (தேர்தல் தொடர்பான விஷயங் களில் அறிவும் அனுபவமும் உள்ள - செயலாளர் பதவிக்குக் குறையாத இரண்டு உறுப்பினர்கள்) ஐந்து  பேர் கொண்ட பட்டியலைத் தயா ரிக்க வேண்டும். அந்த பட்டியலில் இருந்து தகுதியானவர்களை, பிரத மர் தலைமையிலான, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலை வர் மற்றும் பிரதமரால் பரிந்து ரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யும். இதில் கூடுதலான அம்சம் என்னவென்றால், தேடல் குழு பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெறாதவர்களையும் பிரதமர் தலைமையிலான குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.