states

img

எதிர்க்கட்சிகள் மீது 7 ஆண்டுகளில் 570 வழக்குகள்!

புதுதில்லி, டிச.25- சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது, வேறெந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் அதிகரித்திருப்பது  ‘என்டிடிவி’ ஊடக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2014-ஆம் ஆண்டு பாஜக மத்தி யில் ஆட்சியைப் பிடித்தது. 2019 தேர் தலில் வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இந் நிலையில், இந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசால் பழிவாங்கப்படாத அரசியல் கட்சிகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் வழக்குகளை போடப்பட்டிருப்ப தாக ‘என்டிடிவி’ தனது ஆய்வில் கூறி யுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்களைத் தவிர, அரசாங் கத்தை விமர்சிக்கும் சமூக செயற் பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறை பிரபலங்கள், பத்திரி கையாளர்கள், முன்னாள் அரசு அதி காரிகள், வழக்கறிஞர்கள், ஊடக நிறு வனங்கள் என ஒருவரும் மோடி அர சின் பழிவாங்கலில் இருந்து தப்ப வில்லை. இவர்கள் அனைவர் மீதும், மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மொத் தம் 570 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

கட்சிகளை எடுத்துக் கொண்  டால், அதிகபட்சமாக காங்கிரஸ் தலைவர்கள் மீது மட்டும் 75 வழக்கு கள் போடப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது 36 வழக்குகளும்,  ஆம் ஆத்மி கட்சியினர் மீது 18 வழக்கு களும் போடப்பட்டுள்ளன. காஷ்மீ ரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி மீது 14, மக்கள் ஜனநாயகக் கட்சி மீது 12, தெலுங்கு தேசம் கட்சியினர்  மீது 12, திமுகவினர் மீது 11, தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர்,

ராஷ்டி ரிய ஜனதாதளம் கட்சியினர் மீது தலா 8, பிஜூ ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது தலா 7, மதச்சார்பற்ற ஜனதாதளம், சிவசேனா, சமாஜ் வாதி கட்சியினர் மீது தலா 6, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீது 4, மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதி முக, ஐயுஎம்எல் கட்சிகள் மீது தலா 3 என வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை தவிர மேலும் 9 கட்சிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்களைத் தவிர்த்து, அர சாங்கத்தை விமர்சிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், திரைத்துறை யினர், தனி நபர்கள் மீது மட்டும் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

இவர்களில் பாலிவுட் நடிகை டாப்சி பன்னு, இயக்குநர் அனுராக் காஷ்யப், முன்னாள் தேர் தல் ஆணையர் அசோக் லவாசா, பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதா பரத்வாஜ் உள் ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள். ஊடக நிறுவனங்கள், பத்திரிகை யாளர்கள் மீதும் தனியாக 29 வழக்கு கள் உள்ளன. உ.பி.யைச் சேர்ந்த தைனிக் பாஸ்கர், லக்னோவைச் சேர்ந்த பாரத் சமாச்சார் உள்ளிட்ட ஊடகங்கள் இவற்றில் குறிப்பிடத்தக் கவை. பாஜக மற்றும் அதற்கு நெருக்க மானவர்கள் மீதும் 39 வழக்குகள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ன.

எனினும் எதிர்த் தரப்பினரோடு ஒப்பிடும்போது இந்த 39 வழக்குகள் மிகமிகச் சொற்பமா னவை ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் இரண்டாவது ஆட்சிக் காலத் தில், ஒரு ஆண்டுக்கு 17 வழக்குகள் என்ற சராசரி இருந்தது. ஆனால், இது மோடி ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2-வது ஐக்கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியின்போது, எதிர்க்கட்சி யாக இருந்த பாஜக தலைவர்களை விடவும், காங்கிரஸ்காரர்கள் மீதே அதிக வழக்குகளை அப்போதைய மன்மோகன் சிங் அரசு பதிவு செய்தி ருந்தது. இது தற்போது தலைகீழாகி யுள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்றால், அது தற்போது மோடி ஆட்சியில் 5 மடங்கு அதிகமாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புள்ளி விவ ரங்களை கடந்த 3 மாதமாக திரட்டி வெளியிட்டுள்ளதாக என்டிடிவி தெரி வித்துள்ளது.