மோடி அரசு அடாவடி நாடாளுமன்றத்தில் விவாதமின்றி மீண்டும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ளது. பீகார் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க அஞ்சி வரும் மோடி அரசு, நாடாளுமன்றத்தை தொடர்ச்சி யாக முடக்கி வருகிறது. மேலும் இந்த நாடாளுமன்ற முடக்க நிகழ்வை சாதகமா கப் பயன்படுத்தி, விவாதம் இன்றி தொ டர்ச்சியாக மசோதாக்களை நிறை வேற்றியும் வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று இந்திய மேலாண்மை நிறுவ னங்கள் (திருத்தம்) மசோதா, 2025 மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத் தம் மசோதா 2025 ஆகியவை எதிர்க்கட்சி களின் எதிர்ப்பு, விவாதம் இல்லாமல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன் னதாக, திங்களன்று எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் யாரும் அவையில் இல்லாத போது மாநிலங்களவையில் இந்திய துறைமுக மசோதா 2025-ஐ நிறைவேற்றி அடாவடியில் ஈடுபட்டது மோடி அரசு.