states

img

பங்குகளை வாங்க பாலிசிதாரர்களுக்கும் அழைப்பு எல்ஐசி தனியார்மயத்தில் தீவிரமாகும் மோடி அரசு!

புதுதில்லி, டிச. 3 - இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமாக - எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் விளங்கி வருகிறது. 13 லட்சம் பேருக்கு நேரடியாகவும், கோடிக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை அளித்துக் கொண்டிருக்கும் எல்ஐசி, சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துமதிப்பு கொண்ட ஆலமரமாக விழுது பரப்பி நிற்கிறது. ஆனால், எல்ஐசி-யை எப்படியாவது தனியார்மயமாக்கி விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில், 51 சதவிகித பங்குகள், கட்டாயமாக ஒன்றிய அரசு வசமே இருக்க வேண்டும் என்ற  விதியை ரத்து செய்து, எல்ஐசி நிறுவனத்தை முழுமையாகவே தனியார் முதலாளி களுக்கு கொடுத்து விடலாம் என்று கடந்த ஆகஸ்டில் சட்டம் கொண்டு வந்தது.

முதற்கட்டமாக எல்ஐசி நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு உள்ள 100 சதவிகித பங்குகளில் ஒரு பகுதி, ஆரம்பப் பொதுச் சலுகை (Initial Public Offering - IPO) மூலம்  தனியாருக்கு விற்று ரூ. 40 ஆயிரம் கோடி  முதல் ரூ. 1 லட்சம் கோடி நிதி திரட்ட திட்ட மிட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க, புதிய பங்கு வெளியீட்டில், 10 சதவிகிதப் பங்குகள் பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்படும்; பாலிசி தாரர்களும் எல்ஐசி பங்குகளை வாங்கலாம் என்று கூறப்பட்டதன் அடிப்படையில், எல்ஐசி-யின் பங்கு வெளியீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரர்கள், அதற்கு ஏதுவாக தங்களின் பான் எண்ணை புதுப்பித்துக் கொள்ளுமாறு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக இத்தகைய புதிய பங்கு  வெளியீட்டில் பங்கேற்பவர்கள், ஆவ ணங்களில் அவர்களது பான் எண்ணை புதுப்பித்திருக்க வேண்டும். அத்துடன், தகுதி வாய்ந்த ‘டிமேட்’ கணக்கும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இதனைக் கூறியுள்ளது. வெளியீட்டின் தேதி அல்லது விலைப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படா விட்டா லும், எப்படியும் இந்த வாரத்திற்குள் சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செபியிடம் வரைவு ஐபிஓ ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்ளாக, எல்ஐசி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;