பீகார் வாக்காளர் சீர்திருத்த விவகாரத்தை விவாதிக்க அஞ்சும் மோடி அரசு
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
கார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தோல்வி பயத்தில் உள்ள பாஜக வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற பெய ரில் சுமார் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கியுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை 1 கோடியை நெருங்கும் என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. மேலும் இந்த விவகாரம் தொ டர்பாக நாடாளுமன்ற இரு அவைகளி லும் விவாதிக்க வேண்டும் என “இந்தி யா” கூட்டணி எம்.பி.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் விவாதிக்க அஞ்சும் மோடி அரசு கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவை களும் கூடின. மக்களவையில் பீகார் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்தினர். அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். வாக்கா ளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்காமல், மற்ற அவை நட வடிக்கையை ஏற்க மட்டோம் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் தொடர் கிளர்ச்சி யில் ஈடுபட்டதால், அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் 12 மணி க்கு அவை கூடியது. “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் தொடர் முழக்கங்களால் மக்களவை 2 மணி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் தொடர் முழக் கங்களால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.