இரிஞ்ஞாலக்குடா, ஜுலை 11- இளைஞருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மருத்துவ உதவிக் குழுக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் ஆர்.பிந்து, முதல் நன்கொடையாக அவரது கையில் இருந்த தங்க வளையலை கழற்றி வைத்தார். கருவன்னூர் மூர்க்கநாடு வந்நேரிப்பரம்பில் விவேக் பிரபா கரனுக்கு (27) உதவி செய்து அமைச்சர் முன்மாதிரியாக செயல்பட்டார். மூர்க்கநாடு கிராமப்புற வாசகசாலை யில் மருத்துவ உதவிக்குழு கூட்டம் நடந்தது. அப்பகுதி மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமைச்சர் அழைக்கப்பட்டிரு ந்தார். கமிட்டி உறுப்பினர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் அமைச்சர் வளையலை கழற்றிக் கொடுத்தார்.