states

img

மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் மீண்டும் மோதல் துணை முதலமைச்சர் அஜித் பவார் பதவி விலக கோரிக்கை

மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் மீண்டும் மோதல் துணை முதலமைச்சர் அஜித் பவார் பதவி விலக கோரிக்கை

மும்பை வாக்கு திருட்டு குற்றச்சாட் டுக்கு இடையே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள் ளார். துணை முதலமைச் சர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உள்ளனர். இந்நிலையில், இறைச்சி விவகாரம் தொடர்பாக மகா ராஷ்டிரா பாஜக கூட்ட ணிக்குள் மீண்டும் மோதல் தலைதூக்கியுள்ளது. மகா ராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர், கல்யாண் மாலேகான் உள்ளிட்ட நகரங்களில் சுதந்திர தினத்தன்று இறைச்சி விற் பனைக்கு தடை விதித்து மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்தன. பாஜக மற்றும் இந்துத்துவா கும்பலின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது. இந்த இறைச்சி விற்பனைக்கு தடை அறி விப்புக்கு நாக்பூர், கல்யாண் மாலேகான் நகரங்களில் கடும்  எதிர்ப்பு கிளம்பியது.  துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு புகார் சென் றுள்ளது. அஜித் பவார் உடனடியாக தொடர்பு கொண்டு நாக்பூர், கல்யாண் மாலேகான் மாவட்ட நகர மற்றும் உள் ளாட்சி நிர்வாகங்களை தொ டர்பு கொண்டு அறிவிப்பின் விபரங்களை கேட்டுள்ளார். அறிவிப்புக்கு தடை விதிக்க வும் கோரியுள்ளார். தொடர்ந்து செய்தியா ளர்கள் சந்திப்பில் அஜித் பவார் பேசுகையில்,” சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்ப னைக்கு தடை விதித்து இருப்பது மோசமானது. யார் எதைச் சாப்பிடுவது என்பது அவ ரவர் விருப்பம். இதில் தலை யிடக் கூடாது” என கூறினார்.  இதற்கு பாஜக உள்ளிட்ட இந் துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மேலும் வகுப்புவாதத்திற்கு அனுமதி வழங்க மறுக்கும் துணை முதலமைச்சர் அஜித் பவார் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித்) பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறைச்சி தடை விவகாரம் காரணமாக மகாராஷ்டிரா பாஜக கூட்ட ணிக்குள் மீண்டும் மோதல் தலைதூக்கியுள்ளது.