ஆர்எஸ்எஸ் - பாஜகவை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மேற்கு வங்க மக்கள் “சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டு, வெளியேற்றப்படுகின்றனர். அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் வெறுப்பூட்டும் கருத்துக்கள் இந்த பாகுபாட்டை மேலும் தூண்டிவிட்டன. இத்தகைய சூழலில், வங்க மொழி பேசும் மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கம் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக சக்திகளால் பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தர்மதலா லெனின் சிலை வளாகத்தில் இடதுசாரிக் கட்சிகள் கண்டனப் பேரணியுடன் வியாழனன்று (ஜூலை 24) போராட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.