states

img

மோடி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திரிபுராவில் கொரோனா அதிகரிப்பு

அகர்தலா, ஜன.18- பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட் டத்திற்குப் பின்னர், திரிபுரா தலை நகர் அகர்தலாவில் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாக இடது முன்னணி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிபிஎம் திரிபுரா மாநிலச் செய லாளர் ஜிதேந்திர சவுத்ரி, சிபிஐ தலைவர் ரஞ்சித் மஜூம்தார், பார்வர்ட் பிளாக் தலைவர் துலால் தேப் மற்றும் புரட்சிகர சோசலிச கட்சித் தலைவர் தீபக் தேப் ஆகியோர் திரிபுரா முதல் வர் பிப்லர் குமார் தேபை சந் தித்து கொரோனா பரவலைத்  தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கு மாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்கள் செய்தியா ளர்களைச் சந்தித்தனர்.

 அப்போது, “திரிபுரா தலை நகர் அகர்தலாவில், கடந்த ஜன வரி 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மகாராஜா பீர் பிக்ரம் விமான நிலைய புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தக் கூட் டத்திற்கு பெருமளவில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.  இவ்வாறு பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் அகர் தலாவில் கொரோனா பரவல் அதிகரித்து விட்டது. திரிபுரா மாநிலத்தில் கொரோனா பர வலின் பாசிட்டிவிட்டி விகிதமா னது 13 சதவிகிதமாக உள்ளது. ஆனால், இதுவே தலைநகர் அகர்தலாவில் 30 சதவிகிதமாக காணப்படுகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பைக் கண்டறிய உதவும் ஜீனோம் சோதனை கருவிக ளைக்கூட இன்னும் நிறுவாமல் திரிபுரா அரசு அலட்சியமாக இருக்கிறது. இப்படி இருந்தால் நிலைமை இன்னும் மோசமா கும். ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வரு கின்றனர். பல்வேறு மாநிலங்க ளிலிருந்தும் வருகிறார்கள். இப் படிப்பட்ட இடங்களில் ஜீனோம் சோதனைக் கருவிகளை பொருத்தாமல் இருப்பது மிக வும் அபாயகரமானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.