மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மேற்கு வங்க மாநில த்தில் மேலும் ஐந்து வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அறிவித்துள்ளது. பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால், வேட்பாளர்கள் அறிவிப்பும் அந்தந்த கட்டங்களுக்காக வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக, இடது முன்னணி சார்பில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து வேட்பாளர்களில் மூன்று வேட்பாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். பாரக்பூர் தொகுதியில் இருந்து தேவ்தத் கோஷ், பசீர்ஹட்டில் நிரபாத சர்க்கார், டய மண்டு ஹார்பரில் மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரதிகூர் ரகுமான் ஆகியோர் போட்டி யிடுகிறார்கள். பாரசாத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் பிரபீர் கோஷ் மற்றும் கட்டல் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தபன் கங்குலி ஆகியோர் களமிறங்குகின்றனர்.