states

img

உ.பி.யில் அரசியல் பழிவாங்கலைத் துவங்கியது பாஜக!

லக்னோ, மார்ச் 19 - அண்மையில் நடைபெற்ற தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி யைத் தக்கவைத்துக் கொண்டுள்ள பாஜக, சமாஜ்வாதி கட்சியினர் மீது சரமாரியாக வழக்குகளைப் போட ஆரம்பித்துள்ளது. உ.பி. சட்டப்பேரவைக்கு நடந்த 7 கட்டத் தேர்தல் மார்ச் 10-ஆம் தேதியுடன் முடிவடைந் தது. அதன் பின்னர், வாக்கு எண்ணும் மையங்களில் இவிஎம் பெட்டிகள் பாதுகாப் பாக வைக்கப்பட்டன. அந்த மையங்களில் வாக்குப் பெட்டிகளை பாஜக-வினர் மாற்ற லாம் என்ற அச்சத்தில் சமாஜ்வாதி கட்சியினர் முகாம் அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பைனாகுலர் மூலம் கண்கா ணிப்பது, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை பரிசோதிப் பது என சமாஜ்வாதி கட்சியினர் தீவிரமாக இருந்தனர். குறிப்பாக, சில இடங்களில் அரசு வாகனங்களை நிறுத்தியும் வாக்குப் பெட்டிகள் இருக்கிறதா? என்று அவர்கள் சோதனையிட்டனர். இதற்காக, தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பிறகு, உ.பி. காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்யத் துவங்கியுள்ள னர். பல இடங்களில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்தி மாவட்டத்தில் 100 சமாஜ்வாதி தொண்டர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு கள் போடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ள தாக மாவட்ட எஸ்பி ஆசிஷ் ஸ்ரீவத்சவா கூறி யுள்ளார். மேற்கு உ.பி.யிலுள்ள ஹப்பூர் என்ற இடத்தில் 36-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹர்தோய் நகரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைது செய்யப் பட்ட நபர், தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே, பாஜக கூட்டாளியான நிஷாத் கட்சி யில் போய் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பி டத்தக்கது. இதுகுறித்து பஸ்தி சாதர் சமாஜ்வாதி எம்எல்ஏ மகேந்திரநாத் யாதவ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பாஜக அரசு சமாஜ்வாதி கட்சியினரை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து நாங்கள் முறையிட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.