திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளியன்று ஒரே நாளில் 45 மில்லி மீட்டர் மழை புரட்டியெடுத்த நிலையில், கொடைக் கானலுக்கு சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்துள்ளனர். முக்கிய இடங்களுக்கு செல்ல முடியாமலும், மலைக்கு கீழே இறங்க முடி யாமலும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தில்லியில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள “கோகைன்” என்ற போதை பொருள் கடத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பலத்த மழை பொழிந்து வரும் ஒடிசா மாநி லத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்த னர். குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பவுத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயி ரிழந்துள்ளனர். குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கி யதில் காயம் அடைந்துள்ளதாக ஒடிஷா சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தின் உள் நாட்டு விமான முனையத்தில் இருந்து ஞாயி றன்று அதிகாலை அந்தமானுக்கு 156 பயணிகளு டன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அந்தமானில் மோசமான வானிலை கார ணமாக தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானிலேயே வட்டமடித்தபடி இருந்தது. வானிலை சீரடையாததால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கி யுள்ள குற்ற பின்னணி உள்ள சாமியார்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 200 சாமி யார்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். திமுக எதிர்த்து போட்டியிட்டால், நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன். திமுகவை நான் ஆதரிக்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை யால் இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே நிலையில் கனமழை தொட ரும் என இலங்கை வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கொழும்பு பிர தேச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். உலகின் முக்கிய விளை யாட்டுத் தொடர்களில் ஒன்றான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றுவரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.