states

img

தாய் சேய் நலனில் கேரளா முதலிடம்

புதுதில்லி, டிச.2- மகப்பேறு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. 2018-20 ஆம் ஆண்டில், கேரளத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் லட்சத்துக்கு 33 ஆக குறைந்துள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரலின் அறிக்கையின்படி, இது நாட்டிலேயே மிகக் குறைந்த விகிதமாகும். ஒரு லட்சத்துக்கு 195  என்ற விகிதத்தில் அஸ்ஸாமில் தாய் சேய் இறப்பு  விகிதம் அதிகமாக உள்ளது. கேரளத்தில் தாய்மார் களின் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 19 ஆகவும் குறைந்துள்ளது.   உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, மகப்பேறு இறப்பு என்பது கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு 42 நாட்களுக்குள் கர்ப்பம் தொடர்பான காரணங்களால் ஏற்படும் உயிரிழப்பா கும். 2016-18 இல் கேரளாவில் பேறுகால இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 43 ஆக இருந்தது. இந்த விகிதம்  2015-17இல் 42 ஆகவும், 2014-16இல் 46 ஆகவும் இருந்தது. 2018-20 ஆம் ஆண்டில் தொடர்ந்து வெள்ளம் உள்ளிட்ட தடைகளைத் தாண்டி கேரளா மாபெரும் வெற்றியைப் பெற்றது. 2018-20இல் ஒரு லட்சத்திற்கு 33 ஆக இருந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரா உள்ளது. தெலுங்கானா - 43, ஆந்திரா - 45, தமிழ்நாடு - 54, ஜார்க்கண்ட் - 56, குஜராத் - 57,  கர்நாடகா - 69.

2030ஆம் ஆண்டுக்குள் தாய் சேய் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்துக்கு 70 ஆகக் குறைக்கும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கை இந்த எட்டு  மாநிலங்களும் எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். தேசிய சராசரி ஒரு  லட்சத்திற்கு 97. இது 2014-16இல் 130 ஆக இருந்தது.  மத்தியப் பிரதேசம் - 173, உத்தரப் பிரதேசம் - 167 என அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக அதிக இறப்பு களைக் கொண்ட மாநிலங்களாகும். சிறுமிகள் மற்றும்  கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி  செய்தல், மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துதல்,  போதிய பராமரிப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் தாய் சேய் மரணத்தை குறைக்க முடியும் என பொது சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

;