states

img

பாலக்காட்டில் அமைதியை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை

பாலக்காடு, ஏப்.19-  தொடர் கொலைகளை தொடர்ந்து பாலக்காட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்  நடைபெற்றது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி தெரிவித்தார். கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகை யில், அமைதி நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.சமூகம் ஒன்றுபட்டால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்றார். இத்தகைய பயங்கர வாதக் கொலைகளைத் தடுப்பது எளி தல்ல. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சமரசமற்ற நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.மாவட்டத்தில் அமைதி திரும்பும் என்றார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. ஒரு வர் வெளிநடப்பு செய்யும் முடிவுடன் வந்தால், எதுவும் செய்ய முடியாது.அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள் ளது. வன்முறையைத் தடுக்க வலுவான தலையீடு இருக்கும். போலீசார் மிக வும் கவனமாக பணிகளை செய்து வரு கின்றனர்.இந்த விஷயத்தில் அனை வரும் ஒத்துழைக்க வேண்டும்.நிறைய விமர்சனம் எழுந்தன.அனைத்தையும் உள்ளடக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் பிரமுகர் சுபைர்  கொலை வழக்கில் 3 பேர் காவலில் உள்ள தாக பாலக்காடு எஸ்பி தெரிவித்துள்ளார்.இந்தக் கொலையை வெளியாட்கள் செய்துள்ளனர். மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை. அடையாள அணிவகுப்பு நடைபெறும். சீனிவாசன் கொலை வழக்கில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், யாரும் கைது  செய்யப்படவில்லை. சுபைர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர் களுக்கு நேரடியாக தொடர்பு இருக்க லாம் என சந்தேகிக்கப்படுகிறது. உறுதிப் படுத்திய பின் விரைவில் தகவல் தெரி விக்கப்படும் என எஸ்பி தெரிவித்தார்.