states

img

கேரளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘வாட்டர்மெட்ரோ’ பயணிகள் எண்ணிக்கை 20 லட்சம் கடந்தது

நீர் போக்குவரத்து துறையில் நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்கும் கேரளாவின் சொந்த நிறு வனமான கொச்சி வாட்டர் மெட்ரோ வில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். ஒரு வருடமும் மூன்று நாட்களும் கடந்த நிலையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.  ஜலமெட்ரோ சேவைகள் 2023 ஏப்ரல் 25  அன்று தொடங்கப்பட்டது. இந்த சேவை துவங்கி ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, மொத்த பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் 20 லட்சமாக அதிகரித்தது.  கோடை சீசனில் தினசரி பயணி களின் சராசரி எண்ணிக்கை ஆறா யிரத்தில் இருந்து எட்டாயிரமாக அதி கரித்தது. இரண்டு வழித்தடங்களில் தொடங்கிய நீர் மெட்ரோ தற்போது ஐந்து வழித்தடங்களையும், 14 படகுகளையும் கொண்டுள்ளது. கொச்சி உயர்நீதிமன்ற முனையத் திலிருந்து - போர்ட் கொச்சி மற்றும் வைப்பில் மற்றும் - போல்காட்டி வழி யாக தெற்கு சித்தூருக்கு சேவைகள் உள்ளன. மேலும், தற்போது தெற்கு சித்தூரில் இருந்து ஏலூர் வழியாக சேரநல்லூருக்கும், வயிற்றிலாவில் இருந்து காக்கநாட்டிற்கும் சேவை உள்ளது. செப்டம்பர் முதல்  மேலும் 5 முனையங்கள் ஜல்மெட்ரோ சேவை செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் மேலும்  ஐந்து முனையங்களில் (டெர்மினல் கள்) தொடங்கும். மேலும் 5 படகுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என கொச்சி கப்பல் கட்டும் தளம் தெரிவித்துள்ளது. இந்த சேவை கும்பளம், பாளையம்துருத், வெலிங்டன் தீவு, கடமக்குடி மற்றும்  மட்டாஞ்சேரிக்கு செல்லும். இந்த இடங்களில் முனையங்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. போதிய படகுகள் இல்லாததால் புதிய சேவையை தொடங்க முடிய வில்லை. தற்போதைய வழித்தடங் களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சேவைகளை அதிகரிக்க முடியாது. புதிய வழித்தடங் களைத் தொடங்கும் போது, பரபரப்பான வழித்தடங்களில் இருந்து படகைத் திரும்பப் பெற வேண்டும். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து அதிக படகுகள் வந்தால் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 10 தீவுகளில் உள்ள 38 முனையங்களை இணைக்கும் வகையில் 78 நீர் மெட்ரோ படகுகளை இயக்குவதே இதன் நோக்கம்.

;