states

img

அம்பலமானது ‘தேர்தல் அரசியல்’

கேரளாவில் ஆறு மாதங் களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலச் சட்டத்திருத்த மசோதாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகான் கை யெழுத்திட்டார். இதன்மூலம் அவ ரது அரசியல் நிலைப்பாடு அம்பல மாகி உள்ளது. மலைவாழ் மக்களின் 65 ஆண்டு  கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து இடது ஜனநாயக முன் னணி (எல்.டி.எப்) அரசு 2023 செப்டம்பர் 14 அன்று சட்டப் பேர வையில் சட்டத் திருத்தத்தை நிறை வேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு வழங்கியது. விவசாயிகளுக்கு எதிரான சில சக்திகள் மசோதா விச யத்தில் தலையிட்டு பிரச்சனையை தீவிரப்படுத்த முயற்சி செய்தன.  மசோதாவில் கையெழுத்திட வேண்  டாம் என ஆளுநரிடம் மனுவும் கொடுக்  கப்பட்டது. இதை சாதகமாக பயன்  படுத்திக் கொண்ட ஆளுநர், கையெ ழுத்திடாமல் மசோதாவை முடக்கி வைத்தார். இடுக்கியைச் சேர்ந்த  விவசாயிகளும், இடதுசாரி அமைப்புகளும் மசோதாவை நிறை வேற்றக் கோரி ஆளுநர் மாளி கைக்கு பேரணியாகச் சென்றனர். பட்டா கிடைத்த நிலத்தில் சாகு படி செய்வதுடன், வீடு மட்டும் கட்  டிக்கொள்ளலாம் என்று 1960 இல்  பட்டம் தாணுபிள்ளை அரசு கொண்டு  வந்த நிலச்சட்டத்தை மக்களின் விருப்பத்திற்கு இணங்கி பின ராயி அரசு திருத்தம் செய்தது.  அதோடு 1960 நலச் சட்டத்தின் துணையாக காங்கிரஸ் முதல்வர்  களாக இருந்த ஆர்.சங்கர் 1964  ஆம் ஆண்டிலும், கே.கருணாகரன்  1993 ஆம் ஆண்டிலும் கொண்டு  வந்த 21 சட்டங்களும் விதிகளும்  திருத்தச் சட்டத்தில் மாற்றப்பட்டுள் ளன. இந்த மாற்றங்களால் அனை த்து அடுத்தடுத்த கட்டுமானங்களை யும் சட்டப்பூர்வமாக்குதல் மற்றும்  சட்டத்தின் திருத்தம் முடிந்தவுடன், எதிர்கால காப்புரிமைகளுக்கு இல வச நில பயன்பாடு சாத்தியமாகும். இடுக்கி மக்கள் அனைவருக்கும் நிலத்தை இலவசமாகப் பயன் படுத்துவதற்கான உரிமையும் அனுமதியும் கிடைக்கும் என்பது மசோதாவின் சாராம்சம். தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு  ஆதாயம் கிடைக்கக் கூடாது என்ற  நிலைப்பாட்டை எடுத்த ஆளுந ருக்கு, கேரள காங்கிரசின் ஆத ரவும் கிடைத்தது என்பது குறிப்பி டத்தக்கது. அனைவருக்கும் நன்மை தற்போதைய புதிய சட்டத்தால்  1960 நிலச் சட்டத்தை மீறி கட்டப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழி பாட்டுத் தலங்கள், அங்கன்வாடி கள், நூலகங்கள், சமுதாயக் கூடங்  கள், பள்ளிகள், மருத்துவமனை கள், கிளப்கள், கூட்டுறவு நிறு வனங்கள் அனைத்தும் புதிய  மசோதா மூலம் சட்டப்பூர்வமாக் கப்படும். பல்லாயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் பயன் பெறும்.

;