கேரளா : அமீபா மூளைக் காய்ச்சலுக்கு 19 பேர் பலி
கேரள மாநிலத்தில் “அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (அமீபா)” எனப்படும் அரிய மற்றும் ஆபத்தான மூளை தொற்று (மூளைக் காய்ச்சல் வகை) வேகமாக பரவி வருகிறது. குளிக்கும் இடங்களில் இருந்து இந்த அமீபா தொற்று பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவ தும் 67 பேருக்கு இந்த தொற்று ஏற் பட்டுள்ளது. இந்த அமீபா மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் உயிரிழந்த னர்.இதன்மூலம் கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. தடுப்பு நடவடிக்கை மாநிலம் முழுவதும் உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்கு கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”தேங்கி நிற்கும் அல்லது மாசுபட்ட நீரில் முகத்தைக் கழுவு வதையோ அல்லது குளிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும். அமீபா மூளைக்காய்ச்சல் பரவலுக்கு எதிராக நாம் வலுவான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கிணறுகள் மற்றும் நீச்சல் குளங்கள் அறிவியல் பூர்வமாக குளோரி னேட் செய்யப்பட வேண்டும்” என அவர் கூறினார்.