states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வெளிநாடு செல்ல கெஜ்ரிவாலுக்கு அனுமதி

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 2014 மக்களவைத் தேர்தலின் போது உத்தரப்பிர தேச மாநிலம் அமேதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப் படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். நடத்தை விதி மீறல் வழக்கு காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பயணத்திற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது பாஸ்போர்ட் டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அதை புதுப்பிக்க அனுமதிக்கக் கோரி வழக்கு நடைபெறும் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் (எம்.பி.,/ எம்எல்ஏ) கெஜ்ரி வால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பாஸ்போர்ட்டை புதுப் பித்துக்கொள்ள நீதிமன்றம் நிபந்தனை யுடன் அனுமதி வழங்கியது. மேலும் வெளிநாடு செல்வதற்கு முன்பாக நீதி மன்றத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் சுல்தான்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இமாச்சலுக்கு  ரூ.1,500 கோடி நிதி

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிர தேச மாநிலத்தின் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை அன்று வான்வழியாக பார்வை யிட்டார். அதன்பிறகு மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகள், சேத மதிப்பீடு ஆகியவை தொடர்பாக காங்க்ரா பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் முதற்கட்டமாக இமாச்சலப் பிர தேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.