states

‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி’ ‘பாரத் ராஷ்டிர சமிதி’ ஆனது!

ஹைதராபாத், அக். 5 - தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தனது ‘தெலுங்கானா ராஷ்டிர சமிதி’ என்ற பெயரை, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசியக் கட்சியாக மாற்றியுள்ளார். பாஜக-வுக்கு மாற்றாக தேசியக் கட்சி ஒன்றை துவங்கு வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த கே. சந்திரசேகர ராவ், விஜயதசமி நாளான புத னன்று தனது கட்சியின் பொதுக் குழுவை தலைநகர் ஹைதரா பாத்தில் கூட்டினார்.  இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு ஏற்கெனவே, மதச்சார் பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி. குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாரதிய கிசான் யூனியன் தலை வர் ராகேஷ் திகாயத் ஆகி யோருக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில், தனது  கட்சியின் பெயரான ‘தெலுங் கானா ராஷ்டிர சமிதி’யை ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என மாற்று வதற்கான தீர்மானத்தை கே. சந்திர சேகர ராவ் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒரு மனதாக ஏற்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. “கட்சியின் பெயர் இனி ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என அழைக்கப்படும்” என்றும், “இது  தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும். குறிப்பாக, மத ரீதியாக மக்களின் உணர்ச்சி களைத் தூண்டி அரசியல் ஆதா யம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி  இருக்கும்” என்று அத்தீர்மா னத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 2001-ஆம் ஆண்டு கே. சந்திரசேகர ராவ்,  தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைத் துவங்கினார். அவ ரின் தொடர்ச்சியான போராட்டங் களைத் தொடர்ந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு தெலுங்கானா தனி  மாநிலம் பிரிக்கப்பட்டது. 2014-இல் தெலுங்கானாவின் முதல் முதல்வராக பதவி ஏற்ற சந்திர சேகர ராவ், 2018-ல் மீண்டும் முதல்வராக தேர்வானார். தெலுங் கானா சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த  ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திரசேகர ராவ் தனது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றியுள்ளார். தீவிரமான பாஜக எதிர்ப்பின் ஒருபகுதியாகவும், 2024 மக்க ளவைத் தேர்தலில் எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் வகை யிலும் தேசியக் கட்சியைத் துவங்கியுள்ள சந்திரசேகர ராவ், இந்த புதிய கட்சியின் சார்பில் டிசம்பர் 9-ஆம் தேதி புதுதில்லியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

;