கர்நாடகா : காங்கிரஸ் எம்எல்ஏவை கைது செய்த அமலாக்கத்துறை
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பந்தய மோசடியில் தொடர்பு இருப்பதாக சித்ரதுர்கா காங்கிரஸ் எம்எல்ஏவான கே.சி.வீரேந்திரா மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து கே.சி.வீரேந்திராவுக்கு தொ டர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கி லாக்கர் கள் முடக்கப்பட்டதாகவும் அம லாக்கத்துறை தரப்பில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து சனிக்கிழ மை அன்று வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் கே.சி.வீரேந்திரா அமலாக்கத்துறை அதி காரிகளால் கைது செய்யப்பட்டார்.