மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு
நாகாலாந்து பாஜக துணை முதலமைச்சருக்கு தொடர்பு?
வன்முறையால் உருக்கு லைந்த மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள லாய் கிரா மத்தில் ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 30 வரை “ஜின்னியா மலர் திரு விழா” நடைபெற்றது. இந்த மலர் திருவிழாவை நாகாலாந்து மாநிலத்தின் தொலைக்காட்சி செய்தி நிறுவனமான “ஹார்ன் பில்” நேரடி ஒளிபரப்பு செய்தது. ஹார்ன்பில் தொலைக்காட்சி சார்பில் தீப் சைகியா லாய் கிரா மத்தில் முகாமிட்டு இருந்தார். மலர் திருவிழாவின் கடைசி நாளான சனிக்கிழமை அன்று மாலை நேரத்தில் தீப் சைகியா மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் தீப் சைகியா தோள்பட்டை கீழ் பகுதி (அக்குள்) மற்றும் கால்களில் பலத்த குண்டு காயங்களுடன் சுருண்டு விழுந்தார். உள்ளூர் மக் கள் மற்றும் காவல்துறையினர் தீப் சைகியாவை மீட்டு சேனாபதி மாவட்ட மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து 141 கிமீ தொலைவில் உள்ள நாகாலாந்து மாநிலத்தின் திமாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அவர் அனுமதிக்கப்பட் டுள்ளார். சைகியாவின் உடலில் இருந்து தோட்டாக்கள் இன்னும் அகற்றப்படாததால், மேம்பட்ட சிகிச்சைக்காக அவர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. திட்டமிட்ட சதி இந்நிலையில், திமாபூர் தனி யார் மருத்துவமனையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சைகியா பேசுகையில்,”நாங்கள் 5 பேர் மலர் திருவிழா நிகழ்வில் செய்தி சேகரித்து அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். வாகனத்தில் ஏறும் போது திடீரென்று என் வலது காலில் பயங்கர சத்ததுடன் துப் பாக்கி குண்டு பாய்ந்தது. அடுத்த சில நொடிகளுக்குள், இரண்டா வது புல்லட் (துப்பாக்கி குண்டு) என் வலது அக்குள் (தோள்பட்டை கீழ் பகுதி) பகுதியைத் தாக்கியது. எங் கள் அணியின் 5 பேரில் இரண்டு முறை சுடப்பட்ட ஒரே நபர் நான் மட்டுமே. அதனால் இந்த தாக்கு தல் தற்செயலானது அல்ல. திட்ட மிட்டது தான். எனது பணி தொடர் பாக எனக்கு உயிருக்கு அச்சு றுத்தல்கள் இருந்தன. மேலும் அனைத்து கோணங்களிலும் விசா ரிக்க காவல்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கூறினார். சைகியா அசாமின் ஜோர் ஹாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். கைது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை உள்ளூர் மக்கள் துப்பாக்கியுடன் பிடித்து காவல்துறையில் ஒப்ப டைத்ததாக செய்திகள் வெளியாகி யுள்ளன. பத்திரிகையாளர் மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து தொடர் விசா ரணை நடத்தி வருவதாக மணிப்பூர் காவல்துறை அறிக்கை வெளி யிட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த “நாகா பத்தி ரிகையாளர்கள் சங்கம் மணிப்பூர் (NUJM)” ஞாயிற்றுக்கிழமை தனது உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. நாகாலாந்து பாஜக துணை முதலமைச்சருக்கு தொடர்பு? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சைகியா சில நாட்களுக்கு முன்பு அசாம் பாஜக அரசின் முஸ்லிம் மக்கள் வெளியேற்ற நிகழ்வை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு நாகாலாந்தின் துணை முதலமைச்சரும், பாஜக மூத்ததலைவருமான யந்துங்கோ பாட்டன், வோகா மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சைகியாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை கடு மையாக சாடினார். இத்தகைய சூழலில் மணிப்பூரில் சைகியா மீது கொலை முயற்சி அரங்கேற்றப் பட்டுள்ளது. வன்முறை பூமியான மணிப்பூரில் சைகியாவை கொலை செய்தால் பிரச்சனை வராது என்ற கோணத்தில், நாகாலாந்து பாஜக துணை முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இந்த கொலை முயற்சியை அரங்கேற்றி னார்களா? என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது.