states

img

சிபிஎம் தலைமையிலான காத்திருப்புப் போராட்டம் வெற்றி

குவாரியை மூட அதிகாரிகள் நடவடிக்கை

புதுக்கோட்டை, செப்.24 - புதுக்கோட்டை அருகே விதிகளை மீறி அரசு நிலத்தை ஆக்கிரமித்துள் ளது ஆய்வில் தெரிய வந்ததால் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் தாலுகா வத்தனாகுறிச்சி ஊராட்சி யில் வெவ்வயல்பட்டி மற்றும் வத்தனா குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடி யிருப்பு அருகே கிரஷர், தார் பிளான்ட் கல்குவாரியுடன் சட்டத்திற்கு விரோத மாக செயல்படக் கூடிய எம்எம்.கிர ஷரை உடனடியாக மூடக் கோரி அப்பகு தியைச் சேர்ந்த கிராம மக்கள் பல கட்டப்  போராட்டங்களை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரையின் கவனத்திற்கு கிராம மக்கள் இப்பிரச்சனையைக் கொண்டு சென்றனர். ஏற்கனவே, இரண்டு கட்டப் போ ராட்டங்களை நடத்தியும் முறையான நட வடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில், குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த வியாழக்கிழமை முதல் இரவு-பகலாக காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியை வருவாய்த்துறையினர் வெள்ளிக் கிழமை நில அளவையருடன் சென்று அளந்து பார்த்தனர்.

அப்போது, சுற்றுச்சூழல் விதிக ளுக்கு முரணாக அந்த கிரஷர் செயல் படுவது தெரியவந்தது. குறிப்பாக விதிகளின்படி குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு 300 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் 260 மீட்டரில் குவாரி உள்ளது. கோவி லுக்கு அப்பால் 500 மீட்டரைத் தாண்டி  இருக்க வேண்டிய குவாரி 209 மீட்டரில் உள்ளது. குளத்திற்கு 300 மீட்டர் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் 119 மீட்டரிலேயே உள்ளது. மேலும், புறம்போக்கு நிலத்தை பினாமி பெயரில் பட்டா வாங்கி, பின்னர் கிரஷர் முதலாளி தன் பெயரில் கிரை யம் செய்துள்ளார். அது மட்டுமல்லா மல் தனக்கு சொந்தமான நிலத்தைத் தாண்டி அதிக அளவில் புறம்போக்கு நிலத்தில் குவாரிக்கான கல்லை வெட்டி எடுத்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை இரவு குளத்தூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இலுப்பூர் கோட் டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், கீரனூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த் துறையினர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியா ளர், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், எம்எம் கிரஷர் உரிமையாளர் ஆக்கிர மித்துள்ள இடத்திற்கு அறிவிப்புக் கொடுத்து, 27.9.2022 அன்று அகற் றப்படும். அனுமதி பெறாத புல எண்ணில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக, சம்பந்தப் பட்ட உரிமையாளரை 27.9.2022 அன்று இலுப்பூர் கோட்டாட்சியர் அலு வலகத்தில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணை முடிந்தபின் விதிகளின்படி ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எம். கிரஷர் மற்றும் எம்.எம். சேண்ட் நிறுவனங்களால் சுற்றியுள்ள பகுதியில் மாசு ஏற்படுகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ள புகாரின் மீது தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்.முருகேசனுக்குச் சொந்தமான குவாரி, உரிமை விதிமுறைகளை மீறி யும், அனுமதி பெறாமல் இதர புலன்க ளில் கனிமங்கள் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் குவாரி உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசார ணைக்குப் பிறகு முடிவான ஆணை  பிறப்பிக்கப்படும் என பேச்சுவார்த்தை யில் எழுத்துப்பூர்வமாக அறி விக்கப்பட்டது. இதனால், இரண்டு நாட்கள் இரவு-பகலாக நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலி கமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் கொண்டாடு கின்றனர்.

;