பாலைவனமாக மாறுகிறதா உ.பி., தலைநகர் லக்னோ
பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
லக்னோ உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. இந்நிலையில், அங்கு நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து பாலைவன மாகும் சூழலை லக்னோ எதிர் நோக்கி யுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் லக்னோ வில் நிலத்தடி நீர்மட்டம் 160 அடி வரை குறைந்துள்ளது. குறிப்பாக ஆசாத் நகர் மற்றும் கீதப்பள்ளி போன்ற பகுதிகளில் முன்னர் 80 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர், இப்போது 240 அடியாக உள்ளது. இதனை அறிந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து நடத்திய விசாரணையின் முடிவில்,“லக்னோவில் தொகுதி வாரியாக நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைவது தொடர்பாக லக்னோ மாவட்ட நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
