அமெரிக்காவின் ராணுவ இருப்பை முற்றிலுமாக ஒழிப்போம் தில்லியில் ஈரான் அமைச்சர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா வின் ராணுவ இருப்பை முற்றிலுமாக ஒழிப்போம் என தில்லியில் ஈரான் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தில்லியில் வெள்ளியன்று நடை பெற்ற ‘ரைசினா டயலாக்’ (Raisina Dialogue) மாநாட்டில் பங்கேற்ற ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே மேலும் பேசுகையில், “இந்தி யாவில் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ‘ஐரிஸ் டெனா’ என்ற ஈரானிய கப்பல், மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஆயுதங்கள் ஏதும் இல்லாத, சுமை ஏற்றப்படாத கப்பல். அந்த சாதாரண கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்கு தலை எங்களால் சாதாரணமாக கடந்து போக முடியாது. இதில் 87 இளம் ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காரண மானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. பாரசீக வளைகுடா (மத்திய கிழக்கு வளைகுடா) பகுதி யில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ரேடா ர்கள் அங்கே வெறும் மீன்பிடிக்கவா வைக்கப்பட்டுள்ளன? அமெரிக்க ரேடார்கள் ஈரானின் ஒவ்வொரு நகர்வை யும் கண்காணித்து, அழிப்பதற்கே திட்ட மிட்டுச் செயல்படுகின்றன. ஈரானை அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்துவிட்டது என்பது இதி லிருந்து தெளிவாகிறது. அதனால் வளை குடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை முற்றிலுமாக ஒழிப்ப தைத் தவிர எங்களுக்கு வேறு வழி யில்லை. எங்கெல்லாம் அமெரிக்கத் தளங்களில் இருந்து எங்கள் மீது தாக்கு தல் தொடங்குகிறதோ, அங்கெல்லாம் நாங்கள் பதிலடி கொடுப்போம். ஈரானும் இந்தியாவும் நாகரிக ரீதியாக ஆழமான வேர்களைக் கொண்டவை. நாங்கள் இரு வரும் இந்தோ-பெர்சிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைப் பகிர்ந்து கொள் கிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டை யும் எங்களுடனான உறவையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம்” என அவர் பேசினார்.
