states

img

நடப்பது அடையாளப் போட்டியல்ல; சித்தாந்தங்களுக்கு இடையிலானது!

புதுதில்லி, ஜூன் 24- குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவு பதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமையன்று தனது வேட்புமனுவையும் தாக்  கல் செய்துள்ளார். இதனிடையே, திரவுபதி முர்மு பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், நாட்டின் குடியரசுத் தலைவராக முதன்முறையாக ஒரு பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர், அதிலுமொரு பெண் தேர்ந்தெ டுக்கப்படுவதற்கான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம் என்று பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திரவுபதி முர்மு-வை ஒரு பழங்குடியினராக மட்டுமே முன்னிறுத்தக் கூடாது என்று  இதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. அந்த வகையில், பழங்குடி மக்கள் நலனுக்கு, ஒரு  பழங்குடியினராக முன்னிறுத்தப்படும் திரவுபதி முர்மு வைக் காட்டிலும் தான் அதிகம் நன்மைகள் செய்துள்ள தாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது: இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது  அடையாளப் போட்டி அல்ல, இது சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி ஆகும். இது முர்முவா, சின்  ஹாவா என்பதற்கான அடையாளம் பற்றிய கேள்வி  அல்ல. நான் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க களத்தில் நிற்கிறேன்.  முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்தான். ஆனால்  அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் ஜார்க்கண்ட் ஆளு நராக இருந்திருக்கிறார். அவ்வளவுதான். ஒரு குறிப் பிட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக தானாகவே அந்த சமூகத்தின் பாதுகாவலராகி விட முடியாது. நான்  நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்  ஜெட்டுகளைப் பாருங்கள். பழங்குடி சமூகத்தினருக்கு அதிகம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினருக்காக, பெண்களுக்காக சிறப்பு ஒதுக்கீடுகள் செய்திருக்கிறேன். இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ் வந்த் சின்ஹா, வரும் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

;