புதுதில்லி,பிப்.19- நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகளின் போது பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு உதவும் வகை யில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முயற்சியில் முதல் கட்டமாக 100 ட்ரோன்கள் பயன்படுத்தப்படு கின்றன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசு கையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாய ட்ரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் உருவாகும். இந்த துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்யும். 21 ஆம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையில் இது ஒரு புதிய அத்தியாயம். இந்த ஆரம்பம் ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்ற வற்றை குறைந்த நேரத்தில் சந்தைக ளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட இதுபோன்ற ட்ரோன்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று தெரி வித்தார்.