states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்தா பூந்தோட்டம் ஆக.16 முதல் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பார்வையிட்டார்.

செமி கண்டக்டர் உற்பத்தி 50, 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் கருக்கொலை செய்யப்பட்டு விட்டதாக மோடி பேசியிருந்தார். இதற்கு 1983 ஆம் ஆண்டே செமி கண்டக்டர்ஸ் லிமிடெட் செயல்பட துவங்கியது என மோடிக்கு காங். பதிலடி கொடுத்துள்ளது.