ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா மீண்டும் உறுப்பினர்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சி லில் இந்தியா மீண்டும் உறுப்பி னராகத் தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நடைபெற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா உள்பட 14 நாடு கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதியான ஹரீஷ் வெளியிட்ட டிவிட்டர் எக்ஸ் தளப்பதிவில், 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 7 ஆவது முறையாக இந்தியா ஐ.நா மனித உரிமை அவையில் உறுப்பின ராக தேர்வாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவின்படி 2026 முதல் 2028 வரையிலான 3 ஆண்டு கால கட்டத்திற்கு இந்தியா மீண்டும் மனித உரிமைகள் கவுன்சிலில் பணியாற்ற உள்ளது.
