states

img

காவியை எதிர்த்தால் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்!

புதுதில்லி, ஏப்.16- ‘‘காவியை அவமதித் தால் கடுமையான பின்விளை வுகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும்’’ என்று தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) பிர தான நுழைவாயில் அருகே ஹிந்து சேனா என்ற மதவெறி அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி மிரட்டல் விடுத்துள் ளது. ராம நவமியன்று, ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதி உண வகத்தில் அசைவ உணவு சமைக்கவோ, பரிமாறவோ கூடாது என்று ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி, வெளியிலிருந்து ரவுடிகளை வரவழைத்து, பல்கலை கழக மாணவர்கள் மீது தாக்கு தல் நடத்தியது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜேஎன்யு பிரதான நுழைவாயில் அரு கிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிக் கொடி களை ஏற்றி, ‘‘காவியை அவ மதித்தால் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று  ஹிந்துசேனா என்ற அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவா் விஷ்ணு குப்தா காணொலி ஒன்றையும் வெளியிட்டுள் ளார். அதில், ‘‘ஜேஎன்யு வளா கத்தில் காவி தொடா்ந்து அவ மதிக்கப்பட்டு வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று அவர் கூறி யுள்ளார்.