states

img

ஒரே இரவில் 170 மி.மீ., கனமழை ; இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு முடங்கியது மும்பை

ஒரே இரவில் 170 மி.மீ., கனமழை ; இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு முடங்கியது மும்பை

12 பேர் பலி ; 800 கிராமங்கள் துண்டிப்பு

வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதிக ளுக்கு அப்பால் காற்ற ழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி யால் மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களான மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சதாரா, புனே உள்ளி ட்ட பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகின்றன. 6 பேர் உயிரிழப்பு மும்பையில் செவ்வாயன்று 4ஆவது நாளாக தொடர்ந்து அதீத அளவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக திங்க ளன்று நள்ளிரவு முதல் செவ்வாய ன்று காலை வரை மும்பையில் 170 மி.மீ., அளவுக்கு இடைவிடாமல் கனமழை புரட்டியெடுத்துள்ளது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மழைநீர் வெள்ளத் தால் பேருந்து, ரயில், விமான சேவைகள் முடங்கியுள்ளன. இத னால் மக்கள் அத்தியாவசிய பொ ருட்கள் இன்றி சிரமப்பட்டு வரு கின்றனர். இந்த 3 நாட்களில் கன மழையில் சிக்கி 12 பேர் உயிரி ழந்துள்ளனர். 100க்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். நான்டெட்டில்  200 பேர் தவிப்பு நான்டெட் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளு க்குள் தண்ணீர் புகுந்து, 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டனர். அந்த பகுதி தனித் தீவு போன்று உள்ளது. இதனால் அவர் களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினருடன் ராணுவத்தி னர் களமிறங்கியுள்ளனர். அதே போல ராவண்கோன், ஹஸ்னால் கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கி  மாயமான 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியும் தொ டர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டில் இருந்து  பணியாற்ற உத்தரவு கனமழை வெள்ளத்தால் மும்பையில் நிலைமை மிக மோச மாக உள்ளது. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளம் தேங்கியுள்ள மற்றும் கனமழை பெய்யும் பகுதிகளில் பள்ளி - கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித் துள்ளது. 800 கிராமங்கள் பாதிப்பு மும்பையை போன்று சத்ரபதி சாம்பாஜி நகர் மண்டலமும் கன மழை வெள்ளத்தால் மிக மோச மான அளவில் பாதிக்கப்பட்டுள் ளது. அங்கு கனமழையில் சிக்கி  800 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், அதில் 150 கிராமங்களின் நிலைமை மிக மோசமான அள வில் இயல்புநிலையை இழந்து விட்டதாகவும் செய்திகள் வெளி யாகின. ரயில் சேவைகள் ரத்து கனமழையால் மும்பை - தானே இடையேயான அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய் யப்பட்டுள்ளன. அதே போல மும்பை பகுதியின் உயிர்நாடியாக கருதப்படும் மும்பை புறநகர் ரயில் சேவையும் கனமழையால் முடங்கியுள்ளது.  2 நாட்களுக்கு  கனமழை தொடரும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை ஏற்கெனவே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இத்தகைய சூழலில், மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செவ்வா யன்று மும்பையில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கையுடன் அதீத அளவில் கனமழை பெய்தது. அதே போல புதன்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை யுடனும், வியாழக்கிழமை (ஆக., 21) அன்று மஞ்சள் எச்சரிக்கை யுடனும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத னால் மும்பையில் நிலைமை மோச மாகலாம் என்று அஞ்சப்படுகிறது.