states

img

கெயில் மோசடி: குஜராத் நிறுவன இயக்குனர் கைது

இந்திய எரிவாயு ஆணையமான கெயில் (GAIL) நிறுவனத்தின் 2 எரி வாயு குழாய் திட்டங்களில் சில ஒப்பந்ததாரர் களுக்கு சாதகமாக  திட்ட வேலை வழங் கியதற்காக, ரூ.50  லட்சம் லஞ்சம் பெறப்  பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லி, நொய்டா மற்றும் விசாகப்பட்டினம் உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை செய்த நிலையில், கெயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (திட் டங்கள்) கேபி சிங் உட்பட 4 பேரை செவ்வாயன்று சிபிஐ கைது செய்தது. கைது செய்யப்பட்ட நால்வரில் குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த அட்  வான்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் இயக்குநர் சுரேந்தர் குமாரும் அடங்குவார்.