https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
‘சொர்க்க லோகம்’
இந்தியாவில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி ஜூன் மாதத்தில் 13.2 சதவீதமாக இருந்தது, ஜூலையில் 4.5 சத வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல, வேலைவாய்ப்பு விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில் சரிபாதியாக வீழ்ச்சி யடைந்துள்ளது. 2017 மார்ச்சில் 20.9 சதவீதமாக இருந்த 14 முதல் 25 வயதிற்கு உட்பட்டோருக்கான வேலைவாய்ப்பு விகிதம் 2022 மார்ச்சில் 10.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோடி ஆட்சியில் நமது பொருளாதாரத்தின் பேரழிவு தாங்க முடியாத துயரங்களையும், நீண்டகால விளைவுகளையும் கொண்டு வந்திருக்கிறது. பொருளாதார மீட்சியை கொண்டு வந்துவிட்டதாக இடைவிடாமல் நடத்தப்படும் மோடியின் படாடோப பிரச்சாரம் அப்பட்டமான பொய் என்பதையே தொடர்ந்து வெளியாகும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. மேலும் மேலும் அதிகரிக்கம் வேலையின்மை, விண்ணுயர பறக்கும் விலைவாசி... துயரத்தின் உச்சம்; மோடியின் ஆட்சி. இதுதான் அவரது வார்த்தைகளில் ‘அம்ரித் கால்’... அதாவது சொர்க்க லோகம்.