states

img

போலியான படங்களை பரப்பி புகழ்பாடும் ஆர்எஸ்எஸ் அடிவருடிகள்

புதுதில்லி, டிச. 8 - பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 9,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களைத் தொடங்கி வைத்தார். இவற்றுள், ரசாயன உரத் தொழிற்சாலை ஒன்றும் அடக்கம். இந்நிலையில், புதிதாகத் திறக்கப்பட்ட ரசாயனத் தொழிற்சாலை என்று சில  படங்கள் சமூக வலைதளங் களில் ஆர்எஸ்எஸ் - பாஜக அடிவருடிகளால் பரப்பப்  பட்டு, மோடியின் சாதனை யாக புகழ்பாடப்பட்டு வரு கின்றன.

“முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கனவு நிறை வேறியது. கோரக்பூர் உரத் தொழிற்சாலை நிறைவு பெற்றது” என்று குறிப் பிட்டு, பாரதிய ஜனதா கட்சி யைச் சேர்ந்த, உத்தரப்பிர தேச மாநிலம் பிந்த்ரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவதேஷ் சிங்  ஒரு வீடியோ பதிவை வெளி யிட்டுள்ளார். பல்வேறு சமூக வலைதளப் பதிவர்களும் இதே காணொலியைப் பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ள விண்ணை முட்டும் கட்டடங்களும், கண்ணைக் கவரும் வடிவமைப்பும் கொண்ட படங்கள் உண்மைதானா? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பிட்ட வீடியோ பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த படங்களை சோதித்துப் பார்த்தபோது, படங்கள்  பல்வேறு நாடுகளின் தொழிற்சாலை களின் படம் என்பது தெரிய வந்துள்ள தாக, பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த உரத்தொழிற் சாலை குறித்த தகவல்களுடன், உல வும் வீடியோவில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு படத்தைத் தவிர பிற  படங்கள் கோரக்பூரின் உரத் தொழிற்சாலையின் படங்கள் அல்ல என்பது அம்பலமாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் - பாஜக என்றால் பொய்; பொய் என்றால் ஆர்எஸ்எஸ் - பாஜக என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  மேற்குவங்க மேம்பாலப் படம் முதல் அண்மையில் வெளியான மோடி, ஆதித்யநாத் தோளில் கைபோட்டு பேசிடும் படங்கள் வரை எத்தனை முறை குட்டுப்பட்டாலும் தங்களது பொய்ப்பிரச்சாரத்தையும் போலியான பிம்ப கட்டமைப்பு பில்டுஅப்புகளையும் நிறுத்தமாட்டார்கள் என்பதையே இந்த காணொளி பிரச்சாரம் உணர்த்துகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இயங்கி வரும் டவ் வேதித்தொழிற்சாலையின் படம் இது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் உர நிறுவனமான சம்பல் நிறுவனத்தின் ஆலை இது.

குஜராத் மாநிலம் ஜாம் நகர் பகுதியில் இயங்கி வரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலையான நயாரா எனர்ஜி குழுமத்தின் ஆலை இது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்.என்.ஜி. ஆலையின் படம் இது. முன்பே (2018 , 2019ஆம் ஆண்டுகளில்) பல்வேறு செய்தி இணையதளங்களில் இந்தப் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் இயங்கி வரும் பியூஏ பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையின் படம் இது.

அந்தக் காணொளியில் உள்ள இந்தப் படம் மட்டுமே கோரக்பூர் தொழிற்சாலையின் படமாகும்.

;