புதுதில்லி, ஜூன் 10 - இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு ஜூலை 18 அன்று தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்த லில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சி யை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவு பேரில், அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், மு.க.ஸ்டாலின், சீத்தாராம் யெச்சூரி, பினோய் விஸ்வம் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைவ தால், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வியாழனன்று அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18 அன்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்றும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
பாஜக வட்டாரத்தில் அடிபடும் பெயர்கள்
இத்தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில், தற்போதைய குடி யரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கேரள ஆளுநர் ஆரிப் முக மது கான், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளு நர் திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாள ராக நிறுத்தப்படலாம் என்று தில்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஆரிப் முகமது கான் சிறுபான்மை இஸ்லாமியபிரிவைச் சேர்ந்தவர்; திரௌபதி முர்மு பழங்குடி யினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அப்துல் கலாம் வரிசையில் மீண்டும் ஒரு இஸ்லாமியருக்கு (ஆரிப் முகம்மது கான்) குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்படலாம். அதேபோல பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்துக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு வழங்கப்பட்டதைப் போல, முதன்முறையாக பழங்குடியினர் ஒரு வரை குடியரசுத் தலைவராக்கும் வகை யில், திரௌபதி முர்மு-வுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரங்களில் பெயர்கள் அடிபடுகின்றன.
எதிர்க்கட்சிகள் வசம் 51 சதவீத வாக்குகள்
எனினும், பாஜக கூட்டணிக்கு ஆதர வாக தற்போதைய நிலையில், 49 சத விகித வாக்குகளே உள்ளன. 51 சதவிகித வாக்குகள் எதிர்க்கட்சிகள் வசமே இருக் கின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் பட்சத்தில் அது ஆளும் பாஜக-வின் திட்டத்திற்கு எதி ராகவும் முடியக்கூடும். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாது அல்லது கூடுத லாக தேவைப்படும் 2 சதவிகித வாக்கு களை, எந்த வகையிலாவது பெற்றுவிட லாம் என்பதே பாஜக-வின் எண்ணமாக இருக்கிறது. இந்நிலையில்தான், பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணை க்கும் ஒருவாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படு கிறது. இந்த முயற்சி உடனடியாக குடி யரசுத் தலைவர் தேர்தலுக்கு பல னளிக்காவிட்டாலும், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்
அதன்படி தேர்தல் அறிவிப்பு வியாழ னன்று வெளியான உடனேயே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கிய சோனியா காந்தி, இதுதொடர்பாக தலைவர்களைச் சந்திக்கும் பணியை, அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைத்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவும் எதிர்க் கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் ஆகியோருடன் மல்லி கார்ஜூன கார்கே ஆலோசனையில் இறங்கியிருப்பதாக தில்லி வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை, 50 நாடாளு மன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்பது குறிப்பி டத்தக்கது.
4,809 பேர்
நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். நாடா ளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்க ளவை உறுப்பினர்கள் 233 பேர், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 033 பேர் என மொத்தம் 4,809 பேர், குடியரசுத் தலை வர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள். தற்போதைய நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்கள வையில் ஒட்டுமொத்தமாக 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களுக்குள்ள மொத்த வாக்குகளின் மதிப்பு 5 லட்சத்து 43 ஆயிரத்து 700 ஆக உள்ளது. அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.
அதேபோல அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களில் 4 ஆயிரத்து 033 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு, 5 லட்சத்து 42 ஆயிரத்து 731 ஆக உள்ளது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல ஒரே மாதிரியாக அல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணத்திற்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு, அந்த மாநி லத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் 208 ஆக உள்ளது. தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு, இங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப 176 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே கோவா போன்ற சிறிய மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு வெறும் 20 மட்டும்தான். ஒட்டுமொத்தமாக அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த வாக்குமதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில், 50 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக் கப்படுவார். 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தையும் சேர்ந்து, இதுவரை 14 பேர் குடியரசுத் தலைவர்களாக இருந்துள் ளனர். தற்போது 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெ டுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.